வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்'
169
(LD600fl. 6: 54-59.)
இப் பாடல்கள் திருவள்ளுவர் காலத்திற்குப் பிந்தினவாயினும், இவற்றுட் சொல்லப்பட்டுள்ள நிலைமை அவர் காலத்திற்கு முந்தியதே. இங்ஙனம் தமிழரைத் தாழ்த்தி அவரொற்றுமையைக் குலைத்த கொடுமையைக் கண்ட திருவள்ளுவர், அதைக் கண்டித்து,
"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
(குறள். 972)
"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
(குறள். 973)
ce
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.'
(குறள். 978)
ce
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்."
(குறள். 133)
"மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.”
(குறள். 134)
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்."
(குறள். 1033)
இரவார் இரப்பார்க்கொன் றீவர்; கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
(குறள். 1035)
என்றும்,
பிராமணரே துறவிற்குரியவர் என்றதை மறுத்து,
அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.”
(குறள். 30)
என்றும்,
துறவறத்தால் மட்டும வீடு பெறலா மென்றதை மறுத்து,
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவ தெவன்."
(குறள். 46)
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று'
J
(குறள். 49)
என்றும்,