வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம்
6
எ-கா :
-
175
"சிலர் பயிரிடுதலை நல்லதொழிலென்று கருதுகின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோரால் இகழப்பட்டது. ஏனெனின், இரும்பை முகத்திற் கொண்ட ஏரும் மண்வெட்டியும் நிலத்தையும் நிலத்திலுள்ள பற்பல பூச்சி புழுக்களையும் வெட்டுகின்றனவன்றோ!" (மனுதருமசாத்திரம், 10:84)
10. திருக்குறள் தமிழ்மறையே
திருக்குறள் பொதுமறையெனப் பெயர் பெற்றிருப்பினும், அது தமிழரை ஆரிய அடிமைத்தனத்தினின்று மீட்கும் தமிழ்மறையாகவே இயற்றப்பட்டது. தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் தலைசிறந்தி ருந்ததனால், திருவள்ளுவர் நடுநிலையாக இயற்றிய தமிழ்மறை தானாக உலகப் பொதுமறையாயிற்று. அதனாலேயே,
பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச்-சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால்.
இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும்
மன்பதைக் கெல்லாம் மனமகிழ
-
துள்ளி புணர வுரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.
அன்பொழியா
அறந்தகளி ஆன்ற பொருள்திரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு-குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு.
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து
என்னும் வள்ளுவமாலைப் பாக்கள் எழுந்தன.
வள்ளுவன் தன்னை யுலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று, பாவலர் சுப்பிரமணிய பாரதியார் பாடியதும் அவ் வகையிலேயே.