உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை

என்னுங் குறளுரையில்,

தமிழியற் கட்டுரைகள்

(குறள், 656)

“இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக வென்னும் அறநூற் பொதுவிதி, பொருணூல் வழி யொழுகுதலும் அரசர் தொழிற்குரிய ராதலும் நன்குமதிக்கற் பாடுமுடைய அமைச்சர்க் கெய்தாமைபற்றி, இவ்வாறு கூறினார்." என்று. ஆ ரிய முறைப்படி உரைகூறும் பரிமேலழகரும் சிறப்புக் குறிப்பு வரைந்திருப்பதால், திருவள்ளுவர், சமையம் வாய்க்கும் போதெல்லாம், ஆரியக் கொள்கையைக் கண்டித்துத் தமிழ் மரபை நாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டவர் என்பது, தெள்ளத் தெளிவாம்.

பரிமேலழகர் அறநூல் என்றது மனுதரும சாத்திரத்தை. தரும நூலென்று ஆரியர் கூறுவனவெல்லாம் அதரும நூல்களாதலின், ஆரியம் பொது அவற்றை அறநூல் என்பது தமிழர்க்கு எதிர்மறைக் குறிப்பாம். 11. நாற் பொருட் பாகுபாடு

ஆரியர் சிந்துவெளியில் தங்கியிருந்தபோது, இயற்கைத் தோற்றங் களையும் ஐம்பூதங்களையும் உணவுப் பொருள்களையுமே தெய்வங்களாக வணங்கி வந்தனர். சோமம் என்னும் ஒரு கொடிச் சாற்றுமதுவும் தெய்வமாக வணங்கப் பட்டது. விடியற்கால ஒளியை உஷா என்றும், கதிரவன் எழுமுன் அதை ஸவிதா (ஸாவித்ரீ) என்றும், எழுஞ் செங்கதிரவனை அருண என்றும், எழுந்த கதிரவனைச் சூர்ய என்றும், எழுகை உச்சிச் செலவு விழுகை ஆகிய முந்நிலை இயக்கங் கொண்ட கதிரவனை விஷ்ணு என்றும், பின்னர்ப் பன்னிரு மாதம் அல்லது ஓரைபற்றிச் சூரியனைப் பன்னிருவர் ஆதித்தர் என்றும், இங்ஙனம் ஒரே சுடரை அறு தெய்வமாக வணங்கியது, அவரின் மதிவளர்ச்சியில்லா நிலையைக் காட்டும்.

அவருக்குக் கோயிலுமில்லை; குளமுமில்லை. விலங்கைக் காவு கொடுக்கும் வேள்வித் தூணே கோயில்,

இறந்தபின் உயிர்கள் கூற்றுவன் உலகத்தையும் கதிரவன் உலகத்தையும் திங்கள் உலகத்தையும், அடையும் என்பதே, அவர் மறுமைக் கொள்கை. கடவுளை அறியாததனால், வீடுபேற்றுக் கருத்தே

அவருக்கிருந்ததில்லை.

தமிழரோ முதல் மாந்தனினத்தாராய்க் கி.மு. ஓரிலக்கம் ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி, கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் வளர்த்து, கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்துறை நாகரிகமும் முத்தமிழிலக்கியமும் முழுமுதற் கடவுள் வணக்கமுங்

"