உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம்

கண்டவர். அதனால், அறம் பொருளின்பம் வீடென்னும் பொருட்பேற்றை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர்.

177

நாற்

பொருள்கள் அறிவியல்தொறும் வெவ்வேறு பாகுபாடு கொள்ளும். அறம் பொருளின்பம் வீடென்பது அறநூற்பாகுபாடு; அகம் புறம் என்பது பொருளிலக்கண நூற்பாகுபாடு; பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என்பது, ஏரண நூற்பாகுபாடு; சித்து (செத்து) சடம் (சட்டம்) என்பது கொண் முடிவு (சித்தாந்த) நூற்பாகுபாடு. இங்ஙனமே ஏனையவும்.

அவ்வந்நிலைக்கு

ஒரே அறிவியற்குள்ளும், அல்லது பிரிவுற்கேற்றவாறு பொருட்பாகுபாடு வேறுபடுவதுமுண்டு. இலக்கண நூலுள், எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்றும், சொல்லதி காரத்தில் உயர்திணை அஃறிணையென்றும், பொருளதிகாரத்தில் அகம் புறம் என்றும், இனிச் சொல்லதிகாரத்துள்ளும் பெயரியலில் பொருளிடங் காலம் சினை குணம் தொழிலென்றும், வேறுபடல் காண்க.

அகப் பொருளிலக்கணத்தில், தலைவன், பொருள்வயிற் பிரியுங்காற் கூறும் கூற்றுக்களுள் ஒன்று 'மூன்றன் பகுதி' (தொல். அகத். 41) எனப்படும். அது "அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற்காமம் நுகர்வேன்” என்பது. இதனால், அறம் பொருளின்பம் என்னும் பாகுபாடும் அகம்புறம் என்னும் பாகுபாடும் வெவ்வேறென்பதும், இரண்டும் தமிழே யென்பதும் பெறப்படும். இதில் இன்பம் என்றது இம்மைக்குரியதாதலால், வீடு விடப்பட்டது.

தமிழரின் உயர்ந்த மதங்கள், சிவமதம் திருமால்மதம் இவ் விரண்டிற்கும் பொதுவான கடவுள் மதம் என மூன்றாம். இவற்றுள் முந்தியது சிவமதம்.

டி

பாண்டி நாடே பழம்பதி யாகவும்”

"தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே”

மன்னு மாமலை மகேந்திர மதனிற்

சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"

"தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி”

என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதனாலும்,

பனிமலைக்கும் குமரிமலைக்கும் இடைநடுப்பட்ட தில்லைச்

சிற்றம்பலம் பேருலக நெஞ்சத்தாவாக,

‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல்"