178
தமிழியற் கட்டுரைகள்
கொள்ளுமுன்பே, பாண்டியனால் அமைக்கப்பட்டதனாலும், ஆரியர் சிவநெறியைத் தழுவு முன்பு, வடநாட்டில் திருக்குறி (லிங்க) வழிபாடு செய்து வந்த தமிழரைச் 'சிசின தேவர்' என்று பழித்ததனாலும், உருத்திரன் கடுங்காற்றுத் தெய்வமேயாதலாலும், சிவன் வேதத் தெய்வமன்மையாலும், சிவமதம் தமிழ மதமே யென்பது வெள்ளிடை மலை. வீடு பேறு இறைவனிடம் பெறுவதேயன்றிச் சிறு தெய்வங்களிடம் பெறுவதன்று. வடபாற் சென்ற தமிழரே திரவிடராகத் திரிந்தும், வடமேற்கிற் சென்ற திரவிடரே ஆரியராக மாறியும் இருப்பதால், தமிழ் திரவிடத்திற்குத் தாயும்
ஆரியத்திற்கு மூலமுமாம் ஆதலால், ஆரியரே நாற்பொருட்
பாகுபாட்டைத் தமிழர்க் கறிவித்தனரென்பது, பேரன் தன் பாட்டன் திருமணத்திற்குப் பாட்டியற்றினான் என்பது போன்றதே.
12. திறக்குறளைப் பயன்படுத்தல்
ஒரு கொடிய நோய்க்கு ஒரு மருத்துவர் சிறந்த மருந்து காணின், அதை நோயாளி உண்டாலொழியக் கண்டாலுங் காண்டாலும் பயனில்லை. அது போன்றே, ஆரிய ஏமாற்றினின்று தப்புவதற்குத் திருவள்ளுவர் வகுத்த சிறந்த முறையைக் கையாளாது, ஆண்டுதோறும் அவர் பெருமையையோ அவர் நூற்சிறப்பையோ அவையோர் மகிழ அடுக்கிக் கூறிப் பயனில்லை.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு."
என்பது ஓர் அறிவுத் துணுக்கு.
(குறள். 423)
வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இல்லாத பண்டைக் காலத்தில், தென்னாடு வந்த ஆரியரான பிராமணர், தம்மை நிலத்தேவரென்று மூவேந்தரையும் ஏமாற்றினர். அவ்வேந்தரும் அதை நம்பி அவர் ஏவியதை இயற்றினர். அதைப் பொதுமக்களும் பின்பற்றினர்.
ஆயின், ஆங்கிலராட்சியும் அறிவியற் கல்வியும் கல்வியும் கண் திறந்த பின்னும், நயன்மைக் கட்சித் தலைவர் கால் தூற்றாண்டு இன முன்னேற்றத் தொண்டு செய்தபின்னும், மறைமலையடிகள் தனித் தமிழியக்கங் கண்ட பின்னும், ஆரிய மொழியாராய்ச்சி யுண்மைகள் வெளிப்பட்டபின்னும், தி.மு. க ஆட்சியும் தவத்திருக் குன்றக்குடியடிகளின் அருள்நெறித் திருக்கூட்டமும் ஏற்பட்ட பின்னும், மருத்துவமும் ஏரணமும் வரலாறும் ஞாலநூலும் கற்றபின்னும், பிறநாடு சென்று மீண்ட பின்னும், பிராமணரை நிலத்தேவரென்று கொள்ளாவிடினும் பிறப்பாலுயர்ந்தவரென்று நம்பியும், மறுமையிற் பிராமணக் குலத்திற் பிறக்க வேண்டுமென்று விரும்பியும், பகுத்தறிவிற்குச் சிறிதும் ஒவ்வாத பிராமணர் நடிப்பை எண்ணிப் பாராதும், மானமழிந்து மதிகெட்டுத் தாம் மக்கட்டன்மை
7