உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

தமிழியற் கட்டுரைகள் அடிமைத்தனத்தையும் அகக்கரண வளர்ச்சித்தடையையும் நோக்குதல்

வேண்டும்.

தமிழன் முதன்முதல் உலகில் நாகரிக விளக்கேற்றி வைத்தவன்; பகுத்தறிவடிப்படையில் மொழியை வளர்த்துப் பொருளுக்கும் இலக்கணங் கண்டவன்; கண்காணாததைக் காணவும் கரது கேளாததைக் கேட்கவும் நெற்றிக் கண்ணை வளர்த்துக் கொண்டவன்; இறப்புநாளை முன்னரே அறிந்து பணிமுடித்து அணியமாகி, மகிழ்ச்சியொடு உறவினரிடம் விடைபெற்றுச் சென்றவன்.

"

கடந்த மூவாயிரம் ஆண்டாக, தமிழன் பிறப்பில் தாழ்ந்தவன் என்று சொல்லிக் சொல்லி அஃறிணையாக்கப்பட்டு விட்டதனால், மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழருள் நூற்றிற் கெழுபத்தைவர் பகுத்தறிவை யிழந்து விட்டனர்.

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தம்

கருமமே கட்டளைக் கல்”

நல்ல குலமென்றுந் தீய குலமென்றும்

சொல்லள வல்லாற் பொருளில்லை-தொல்சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி யாள்வினை

என்றிவற்றான் ஆகுங் குலம்".

(குறள். 972)

(குறள். 505)

(நாலடி. 195)

செல்வன், தவஞ்செய்தோன்; கற்றோன், உழைப்பாளி, அதிகாரி என்று பெயர் பெறுவதனாலன்றி, பிறப்பாற் சிறப்பில்லை யென்பது இதன் பொருள். ஒருவர் அல்லது ஓரினத்தார் தம் முன்னோராலும் பெருமை பெறலாம். தமிழரின் முன்னோர் புறப்போராகவும், ஆரியரின் முன்னோர் இரப்போராகவும் இருந்ததனால், தமிழரே ஆரியரினும் உயர்ந்தோராவர்.

இற்றையுலகில், தூய வெள்ளையர் ஐரோப்பியரும் அவர் வழியினருமாவர். அவருக்கு நேர்மாறாக இருண்ட கறுப்பர் ஆப்பிரிக்கர். ஆயினும், ஆப்பிரிக்கர் வெண்ணிறம்பற்றியோ, தம்மை நாகரிகப் படுத்தினவர் என்பதுபற்றியோ, ஐரோப்பியரை உயர்வாகவும் தம்மைத் தாழ்வாகவுங் கருதுவதில்லை. எல்லா வகையிலும் ஆப்பிரிக்கரினும் உயர்வான தமிழர் ஏன் கையுங்காலுமாக வந்து தம்மையிரந்தவரும் தம்மாற் புரக்கப்பட்டவரும் நாகரிகப்படுத்தப்பட்ட வரும் சின்னஞ் சிறுபான்மை யருமான அயலாருக்குத் தாழ்ந்து நிற்றல் வேண்டும்?

இங்கிலாந்தில், பொதுமக்கள் (Commons), பெருமக்கள் (Lords) என இருவகுப்பார் இருப்பினும், பதவியினாலும் அரசனதிகாரத்தினாலும் பொதுமக்களும் பெருமக்களாகின்றனர். இங்கே இந்தியாவில், சிறப்பாகத்

-