வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம்
181
தமிழ்நாட்டில் தமிழரனைவரும் கதிரவனுந்திங்களுமுள்ள காலமெல்லாம் பிராமணனுக்குத் தாழ்ந்தவரென்பது, பகுத்தறிவிற் கொவ்வாததும் வாழ்நாட் சிறை போன்ற கடுந் தண்டனைக் கேற்றதுமான குற்றமேயாகும்.
நெற்றித் கண்ணைத் திறந்தாலுங் குற்றம் குற்றமேயென்று நக்கீரர்
போன்று,
Ce
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான்'
க
JJ
(குறள். 1062)
என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், அவர் போன்று திடநெஞ்சும் நடுநிலையும் உள்ளவரேயன்றி, தொடை நடுங்கிகளும் வையாபுரிகளும் திருக்குறளை ஆராயவோ பயன்படுத்தவோ முடியாது. ஆதலால், வையாபுரிகளையும் வாய்மைத் தமிழரையும் பிரித்தறிதல் வேண்டும். 13. தமிழாரியப் போராட்டம்
செங்குட்டுவ கனகவிசயர் போர் பதினெண் நாழிகையும், பாண்டவர் கௌரவர் போர் பதினெண்நாளும், இராம இராவணர் போர் பதினெண் மாதமும், தேவரசுரர் போர் பதினெண் ஆண்டும் நடந்தனவென்று சொல்லப்படும். ஆயின், தமிழாரியப் போரோ பதினெண் நூற்றாண்டு நடந்து வந்தும் இன்னும் முடிந்தபாடில்லை.
'ஆரியம் நன்று; தமிழ் தீது” எனவுரைத்து, நக்கீராற் சாவவும் எழவும் பாடப்பட்ட குயக்கோடன் காலத்திலிருந்து தமிழாரியப் போர் நடந்து வருகின்றது.
கடவுள் மக்களெல்லாருக்குந் தந்தை. எல்லாரும் அணுகி தத்தம் தாய் மொழியிற் போற்றி வழிபடலாம். திருத்தமாகப் பேசும் மக்கள் மொழியைவிட, திருந்தாத மழலை பேசும் குழந்தைகள் மொழியே பெற்றோர்க் கின்பம் பயக்கும். அங்ஙனமே, கற்றோர் புகழும் புலமைச் செய்யுளைவிட, கல்லார் புகலும் எளிய உரை நடையே இறைவனுக்கு இன்பமாம்.
ல
இந்திய மதங்களுட் சிறந்த சிவமதம் திருமால் மதமும், தமிழர் கண்டவை என்பது முன்னரே கூறப்பட்டது. குறிஞ்சி நில முருகன் வணக்கத்தினின்று சிவமதமும், முல்லைநில மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும், தோன்றின.
உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வமும் சிவன் என்னும் தமிழத் தெய்வமும் வெவ்வேறு; அங்ஙனமே, விஷ்ணு என்னும் ஆரியத் தெய்வமும் திருமால் என்னும் தமிழத் தெய்வமும் வெவ்வேறு.
சிவ வழிபாடும் திருமால்வழிபாடும் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுத் தமிழிலேயே நடைபெற்று வந்தன. பிராமணர் முதுகுடுமிப் பெருவழுதி போன்ற பேதை வேந்தரை ஏமாற்றி, தமிழ்ப் போற்றி நூல்களை ஆரிய