உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

தமிழியற் கட்டுரைகள்

ஆகமங்களாக மொழி பெயர்த்துக் கொண்டு, தமிழை வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளி, பிராமணரே சமற்கிருதத்தில் கோவில் வழிபாடு நடத்திவருமாறு செய்து விட்டனர்.

"மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”

என்று மாணிக்கவாசகர் பாடியிருத்தல் காண்க.

-

6

மகேந்திரம் என்பது, இலங்கைக்கு மேற்கில் பொதிய மலைக்குத் தென்பால் இந்துமாவரியில் மூழ்கிப்போன ஒரு மலைத் தீவு. அதிற் சிவபெருமான் போற்றி நூல் தோற்றுவித்தது ஆரியர் வருகைக்கு முந்திய நிகழ்ச்சி. அத்தீவின் தமிழ்ப்பெயர் இறந்து பட்டது.

ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் கிறித்தவ மதத்தைப் பரப்பியவர் உரோமாபுரிக் கிறித்தவக் குரவராதலால், அவர் தம் இலக்கிய மொழியாகிய இலத்தீனிலேயே வழிபாடு நடத்தினர். ஆயின் இத்தாலி யரல்லாதவ ரெல்லாரும் நாளடைவில் தத்தம் தாய்மொழியிலேயே வழிபாட்டை நடத்தி வருவாராயினர்.

இங்கோ, நாடு தமிழ்நாடு; மக்கள் தமிழ் மக்கள்; மதம் தமிழ மதம்; கோவில் தமிழர் கடியவை; தெய்வப்படிமை தமிழர் சமைத்தவை; தெய்வம் தமிழர் தெய்வம்; திருக்கோவில் உடமைகளெல்லாம் தமிழர் தந்தவை; மக்கள் பேசும் மொழி தமிழ். இங்ஙனமிருந்தும், பிராமணர் தமிழ் வழிபாட்டைத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழருள் திரவிடரும் அடங்குவர். இனி, மராட்டிய மன்னரும் பிறரும் கட்டிய இரண்டொரு கோவில்களிருப்பினும், அவையும் தமிழர் தந்த வரிப்பணங் கொண்டே கட்டியவையென்றறிதல் வேண்டும்.

இது கோவரசு நீங்கிய குடியரசுக் காலம். தி.மு.க. அரசு எல்லா நிலைமைகளையும் தீர ஆய்ந்து, தமிழ்த் திருமணத்தைச் சட்டப்படி செல்லவைத்தது போன்றே, தமிழ் வழிபாட்டையும் திருக்கோவில்களிற் புகுத்தியது. இது தமிழ் நாட்டரசு செய்ய வேண்டிய தலையாய கடமையே.

ஆயின், தமிழரை என்றும் தம் அடிப்படுத்தவே திட்டமிட்டுள்ள பிராமணர், இக்காலத்தில் நிலத்தேவர் என்று தம் உயர்வை நாட்ட முடியாமை கண்டு, தம் இலக்கியக் கலவை மொழியையே கருவியாகக் கொண்டு, சமற்கிருதம் தேவமொழியென்றும் அஃதொன்றிலேயே வழிபாடு நடத்தல் வேண்டுமென்றும் அதுவே தொன்று தொட்ட வழக்கென்றும், தில்லி மேலுயர் மன்றத்தில் வழக்காடி வென்று விட்டனர்.

பண்டைய இந்திய வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் செவ்வை யாகவும் உண்மையாகவும் வரையப்படாமையால், இந்திய மேலுயர் மன்றம் செய்த தீர்ப்புச் செல்லாது. இவ்வழக்கு உலக முதன்மொழியாகிய தமிழும்