உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தமிழியற் கட்டுரைகள்

“திரவிட மொழிகளின் வேற்றுமையமைப்பின் கூறுபாட்டை ஆயப்புகுங்கால் திரவிட இலக்கணியர் அவற்றை ஒழுங்குபடுத்தியுள்ள முறையையே கையாள்வோம். அது சமற்கிருத முறையே. இவ்வகையில் சமற்கிருதத்தைப் பின்பற்றியது உண்மையில் வழுவே. ஏனெனின், சமற்கிருதத்தில் எட்டே வேற்றுமையிருக்க தமிழ் தெலுங்கு முதலியவற்றி லுள்ள வேற்றுமை யெண்ணிக்கை பெரும்பாலும் திட்டமற்றதாயிருக் கின்றது. ஒரு பெயரின் ஈற்றில் சேர்க்கப்பெறும் ஒவ்வொரு பின்னொட்டும், சரியாய்ச் சொன்னால், ஒரு புது வேற்றுமையாகின்றது. அதனால் அத்தகைய வேற்றுமைகளின் எண்ணிக்கை, பேசுவோனின் தேவையையும் வண் வெளிப்படுத்த விரும்பும் பல்வேறு நுண்பொருள் வேறுபாட்டையும் பொறுத் துள்ளது. விதப்பாக, சில வேளைகளில் வேற்றுமைத் திரிபு என அமைக்கப் பெறும் வேற்றுமையடி, சிலவிடத்துக்கிழமைப் பொருளும் சிலவிடத்து இடப்பொருளும், சிலவிடத்து பெயரெச்சப் பொருளும் தருவதால் அது ஒரு தனியிடம் பெற்றிருத்தல் வேண்டும். உடனிகழ்ச்சி வேற்றுமையும் அங்ஙனமே. (வேற்றுமையடியையுங் கருவி வேற்றுமையை யும் காண்க) இங்ஙனமிருந்தும், திரவிட இலக்கணியர் வழக்கம் வேற்றுமை யெண்ணிக்கையை எட்டாக வரையறுத்திருக்கின்றது. இவ்வொழுங்கு பாட்டிற் பல வசதிக் குறை களிருப்பினும் நாம் புகவிருக்கும் கூறுபாட்டாய் வில் பொதுவான வழக்கைத் தழுவுவது தெளிவுணர்ச்சிக் கேற்றதாயிருக்கும். தமிழ் இலக்கணியர் சமற்கிருத வேற்றுமையொழுங்கைப் பின்பற்றுங் கால், கொடை வேற்றுமை நீக்க வேற்றுமை எனப் பொருள்பற்றிப் பெயரிடாமல் எண்பற்றியே சமற்கிருத முறையைத்தழுவி பெயரிட்டருக்கின்றனர். அவர், சமற்கிருதத்திலுள்ள வரிசைப்படியே, முதல் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை என எட்டாம் வேற்றுமை வரையும், ஒவ்வொரு வேற்றுமைக் கும் முன் ஓர் எண்ணை யிட்டிருக்கின்றனர். எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை திரவிட வேற்றுமை வரிசையின் தலைப்பில் நின்றாலும். இம்மொழிகளால் ஆளப்பெறும் உண்மையான வேற்றுமைகள் திரிவேற்றுமைகளே”.

இதன் மறுப்பு வருமாறு:-

"வேற்றுமை தாமே ஏழென மொழிப”

"விளிகொள் வதன்கண் விளியோடெட்டே”

(தொல். 546)

(தொல். 547)

எனத் தொல்காப்பியம் பொருள்பற்றி வேற்றுமை எட்டேயெனத் திட்டமாய் வரையறுத்துக் கூறுவதால், திரவிட வேற்றுமை யெண்ணிக்கை திட்டமற்றது எனக் கூறுவது பொருந்தாது. தொல்காப்பியத்தின் வழி நூலான நன்னூலும், ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கும் றாய்ப்பொருள்

வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை” என

வரையறையே காரங்கொடுத்துக் கூறுதல் காண்க.

(நன். 291)