ஆய்த எழுத்துவகைமை
எழுத்தெனப்படும்
11) ஆய்தம்
அகர முதல னகர விறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே'
அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன’
J
(தொல்.)
என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் (நூன்மரபு, 1, 2) முதலெழுத்து முப்பதென்பதும், சார்பெழுத்து மூன்றென்பதும், இவற்றுள் முன்னையவே சிறந்தன வென்பதும் பெறப்படும்.
"முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்து வரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தன; ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்திலவெனவும் பொருடந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றற்கு, எழுத்தோரன்ன என்றார்” என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.
இனி, “இப் பெயர்களே பெயர். இம்முறையே முறை தொகையும் மூன்றே” என்று நச்சினார்க்கினியர் தேற்றேகாரமிட்டுக் கூறுவதாலும், நன்னூலார் சார்பெனக் கூறிய பத்து எழுத்துக்களுள் ஏனைய வேழும் தொல்காப்பியர்க்கும் நச்சினார்க்கினியர்க்கும் நன்னூலார் கொள்கை யிருந்ததில்லை யென்பது தெளிவாம்.
ஆய்தப்பெயரும் ஒலியும்
தொல்காப்பியர் ஆய்தத்தைக் குறிக்கும்போதே முப்பாற்புள்ளி என அதற்கு மற்றுமொரு பெயர் கொடுத்தார். பிற்காலத் தாசிரியர் வேறுஞ் சில பெயரிட்டு வழங்கினர். “ஆய்தம் என்பது அஃகேனம். அஃகேனமெனினும்