உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

தமிழியற் கட்டுரைகள்

படைக்கலமும் போல் வரிவடிவு கொண்டிருப்பதால் ஆய்தம் எனப் பெயர் பெற்றது எனக் காரணங்காட்டுவாரும் உளர். ஆய்தம் என்னும் சொல் ஓரிடத்தும் ஆயுதம் என எழுதப் படாமையையும், ஆயுதம் என்னும் சொல்லும் ஆய்தம் என எழுதப்படாமையையும், நோக்குக. ஆரியர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே, ஆய்தவெழுத்தும் அதன் பெயரும் குமரிநாட்டில் தோன்றிவிட்டன என்னும் உண்மையையும் அறிந்து கொள்க. இனி, யாப்பருங்கலவிருத்தி யுரைகாரர் “உயிரே மெய்யே" என்னும் நூற்பாவுரையில்,

"சார்பிற் றோன்றும் தன்மைய” என்று மிகுத்துச் சொல்லிய வதனால், அகரத்தொடு யகரவொற்று வந்தும் ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாய் நிற்கும்......

ஆய்தமும் யவ்வு மவ்வொடு வரினே

ஐயெனெழுத்தொடு மெய்பெறத் தோன்றும்’

என்றார் அவிநயனார்.

"வரலாறு.

கஃசு, கஃதம், கஃசம் என அகரத்தொடு ஆய்தம் வந்து கைசு, கைதம், கைசம் என ஐகாரத்தின் பயத்தவாயினவாறு. என உரைத்திருப்பது, ஆய்தத்தைப் பொறுத்தமட்டில் உத்திக்குப் பொருந்துவதன்று. கஃசு முதலிய மூன்றும் கைசு முதலிய மூன்றாகத் திரிந்திருக்கலாமேயன்றி, ஆய்தம் யகரமெய் யொத்தொலித் திருத்தல் முடியாது. ஒருகால், கள் என்பது கஃசு முதலியவற்றின் அடியாகலின், அது கய் எனத் திரிந்திருக்கலாம். ஒப்புநோக்க : தொள் - தொய், பொள் - பொய். ஆய்தப் பிறப்பு

“சார்ந்துவரி னல்லது” என்னும் சார்பெழுத்துப் பிறப்பு நூற்பாவின் ஆற்றொழுக்கைக் கொண்டுகூட்டாகச் சிதைத்து, இருகூறாக்கி, “சில எழுத்துகளைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று, ஆராய்ந்து வெளிப்படுக்கப்பட்ட எழுத்துகள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால், தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும்” என்றும், “ஒழிந்த ஆய்தந் தமக்குப் பொருந்தின நெஞ்சு வளியாற் பிறக்கும்” என்றும் உரைத்தனர் நச்சினார்க்கினியர்.

இந் நூற்பா முழுவதையும் ஒரே கூற்றாகக் கொண்டு, 'சில எழுத்து களைச் சார்ந்துவரினல்லது தமக்கெனத் தனியியல்பில்லாதனவென ராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட (குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமாகிய) மற்ற மூன்று எழுத்துகளும், தத்தம் முதலெழுத்துகளின் பிறப்பொடுபொருந்தி அவற்றோடொருபுடை யொத்த தோற்றத்தினவாய்த் தத்தம் சிறப்புத் தன்மையுடன் நடக்கும்' என்றுரைப்பதே பொருத்தமாம்.

77