உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

6

தமிழியற் கட்டுரைகள்

மிகுதிப் பொருள்தரும் வடமொழி முன்னொட்டு (உபசர்க்கம் - Prefix) ati, adhi என்று இரு வடிவிலிருப்பதனாலும், மிகுதலைக் குறிக்கும் அதிகரித்தல் என்னும் வினைச் சொல் வடமொழியிலின்மையாலும், அதிகம் என்பதற் கினமான அதனம் (அதி+அனம்) என்னும் தொழிற்பெயர் தமிழிலேயே யிருத்தலானும், அதிகன் என்னும் தமிழச் சிற்றரசர் குடிப்பெயர் மிக்கோன் அல்லது பெரியோன் என்று பொருள் கொண்டிருக்கலாமாதலானும், அதி என்பதைப் பெரும்பாலும் ஒத்த அதை என்னும் தமிழ் வினைச் சொல் வீங்குதல் (பருத்தல்) மிகுதல் என்னும் பொருள் தருதலானும், அதி என்னும் சொல் ஒருகால் ஒரு வழக்கற்ற பழந்தமிழ் வினையாயிருக்குமோ என்னும் ஐயம் நிகழ்கின்றது. இனி, “அதினுட்பம்" என்று பாடங் கொண்டு, "மேற்கூறிய நூற் கல்வியோடுகூட நுண்ணிதாகிய மதியினையும் உடையார்க்கு, அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர்நிற்கும் வினைகள் யாவுள?" என்னும் மணக்குடவர் உரை, சொல்வகையிலும் பொருள் வகையிலும் பரிமேலழகருரையினுஞ் சாலச் சிறந்ததாம். இப்பொருளில் அதி என்னும் முன்னொட்டிற்கே இடமில்லை. பரிமேலழகர் ஒரு தென்சொல்லை வடசொல்லாக்குவான் வேண்டி, “இனி, அதினுட்பமென்று பாடமோதி, அதனினுட்பம் யாவென்றுரைப்பாருமுளர். அவர் சூழ்ச்சிக்கினமாய் முன் சுட்டப்படுவதொன்றில்லாமையும், சுட்டுப் பெயர் ஐந்தா முருபேற்றவழி அவ்வாறு நில்லாமையு மறிந்திலர்." என்று மணக்குட வருரையை மறுத்திருப்பது, அவரையுந் தாக்குதல் காண்க.

2. சிறப்புத் தொடர்ச் சொற்கள்

அசையியல்=நுடங்கிய இயல்பினையுடையாள். இது அன்மொழித் தொகையாயினும் அரிய அமைப்புடையது.

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்கப்

பசையினள் பைய நகும்”

(1098)

அறன்கடை=கரிசு (பாவம்)

ce

அறன் கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையா ரில்"

(142)

உயிர் நிலை=உடம்பு.

ee of

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு'

(255)

(290)

ஊருணி=ஊரார் குடிக்கவோ குளிக்கவோ உதவும் குளம். இது பாண்டி நாட்டு வழக்கு முதற் காலத்தில் இது குடிநீர் நிலையையே குறித்திருத்தல் வேண்டும்.

6