68
தமிழியற் கட்டுரைகள்
"கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கட் டங்கியான் தாழ்வு"
(117)
பீழி = பீடி. பீழித்தல் = துன்புறுத்தல். பிள்-பீள்-பீழ்-பீழி.
பிடுங்கல் என்னும் வழக்கை நோக்குக.
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது”
(843)
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது"
(1217)
முயற்று=முயற்சி.
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்"
வரன்=பரம் (மேலுலகம்).
புரம்-பரம்-வரம்-வரன். புரம்=மேலிடம்.
கோபுரம்=அரசனிருக்கும் உயர்ந்த இடம்.
புரை யுயர் பாகும்"
உரனென் னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து”
4. சிறப்புப் பொருளாட்சி
இடம்=செல்வம். இடம்-இடன்.
இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு"
"இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்”
என்பு=உடம்பு. இது சினையாகுபெயர்.
Ce
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு"
(616)
(தொல்காப்பியம், 785)
(24)
(1064)
(218)
(72)
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு"
(73)
குடங்கர்=குடில்.
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று”
(890)
குதித்தல்=தாண்டுதல், கடத்தல், மேற் கொள்ளுதல், வெல்லுதல்.
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு"
(269)