சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
"என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர்ப்புறம் பொலிய வேய்ந்திட் டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான் மன்பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள வென்றான்.”
'மன்னர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காண மின்னிப் பொன்மழை பொழியின் நந்தும் அன்றெனிற் புகைந்து பொங்கித் துன்னினார் தம்மை யெல்லாஞ் கட்டிடும்."
விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்துனைப் பகழி.'
79
1377
1117
435
இவை இனிய உருவகம், முத்தியிலம்பகத்தில் சீவகன் வீடுபேறு ஓர் உருவக நாடகமாக வரையப்பெற்றுளது, திருப்போரும் பிரபுலிங்க லீலையும் போல.
"வெஞ்சின
உகுத்தவே."
என்பது தற்குறிப்பேற்றம்.
சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட
முந்திநலி கின்றமுது மூப்பொழியு மென்றான்.'
570
2020
இஃது இரட்டுறல். இதையே வில்லிபுத்தூரர் தம் பாரதத்தில்
ஆள்கின்றார்.
காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பான் ஆழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான் மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே.” இஃது ஒரு சொல்லோவியம்.
1230
நவிற்சிகள்
கம்பராமாணயத்திற்போல வரம்பிறந்த உயர்வு சிந்தாமணியிலில்லை. பகுத்தறிவிற்குப் பொருந்துமாறு அறிஞரை இன்புறுத்தும் அரிய அழகிய அணிகளையே தேவர் ஆளுகின்றார். 5. சொல்லாராய்ச்சித் துணை:
சிந்தாமணிச் சொல்லாராய்ச்சியால் அறியப்படும் சொல்லியல்
உண்மைகளாவன:
(1) சொற்களின் முந்து வடிவம்:
அரவு (அரா), நறவு (நறா), கோன் என்னுஞ் சொற்களின் முந்து வடிவம், முறையே, 'அர, நற, கோவன்' என்பன.
இவ்விருந்தான் (இவ்விடத்திருந்தான்) என்னும் வழக்கு, சுட்டிடைச் சொற்கள் ஆதியில் பெயரும் ஈரெச்சமுமாகப் பயன்பட்டதை உணர்த்தும்.