உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

தமிழியற் கட்டுரைகள்

காதற்பொருளை உணர்த்தும் 'மாதர்' என்னும் சொல்லின் பகுதி 'மாது' என்பது. 'மாதியாழ்' என வருதல் காண்க.

(2) வழக்கற்ற சொற்கள்:

இலக்கித்து (எழுதி) என்னுஞ்சொல், இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் பகுதியான இலக்கு என்பதினின்று திரிக்கப்பட்டு ‘இலக்கி’ என ஒரு வினை பண்டைக்காலத்து வழங்கினமையை உணர்த்தும்.

பொற்ற (நல்ல), பொற்றது (பொலிவு பெற்றது) என்னுஞ் சொற்கள், 'பொல்' என்னும் வழக்கற்ற வினையடியாய்ப் பிறந்த பெயரெச்சமும், வினைமுற்றுமாகும். 'கல், வில்' என்னும் வினையடியாக, 'கற்ற 'கற்றது ‘விற்ற ‘விற்றது' என்னும் பெயரெச்சவினை முற்றுக்கள் பிறத்தலைக் காண்க.

"

பொல்லுதல்-பொலிதல், அழகாயிருத்தல். பொல்-பொன். பொல்- பொலம். பொல்-பொலி-பொலிவு. பொல்+பு=பொற்பு. பொலம்-பொனம்.

'பொற்பு' என்னும் உரிச்சொல், 'பொற்ற' எனத்திரிந்ததென்று நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது. உரிச்சொல் என்பது செய்யுட்சொல்லேயன்றி, இலக்கண வகைச் சொல் அன்று. 'பொற்பு' என்னும் தொழிற்பெயர் செய்யுளிற் சிறப்பாகப் பயின்று உரிச்சொல்லாயிற்று.

(3) புலவர் சொற்றிரிப்பு:

"

புலவர் சொற்களைத் தம் செய்யுட்களில் மோனையெதுகைக் கேற்பத் திரித்துக்கொள்வர் என்பது, கம்பலம் (கம்பலை), அளமரு (அலமரு), இறுவரை (இருவரை), பிளிற்றல் (பிலிற்றல்), மத்தம் (மத்து), பொனம் (பொலம்) முதலிய சொற்களாற் பெறப்படும்.

(4) தொல்காப்பியவழு:

‘நும்' என்னும் சொல்லினின்று 'நீயிர்' என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் திரிந்ததாகத் தொல்காப்பியர் கூறுவது பற்றி, 'நீம்' என்னும் சிந்தாமணிச் சொல்லைத் தேவர் படைப்பாகச் சில புலவர் கருதுகின்றனர்.

'நீம்' என்னுஞ் சொல்லே முந்தியதாம். 'நீன், நீம்' நீங்கள் (நீம்+கள்) என்பன முன்னிலையொருமை பன்மைப் பெயர்கள். 'நீன், நீம்' என்னும் சொற்கள் இன்றும் தென்னாட்டில் நாட்டுப்புற மக்களிடை வழங்குகின்றன. கன்னடத்தில், 'நீன்' என்பது திரியாதும், 'நீம்' என்பது 'நீவு' (நீம்-நீமு-நீவு) எனத் திரிந்தும் வழங்குகின்றன.

'நும்' என்பது (இறந்துபட்ட) 'நூம்' என்பதன் வேற்றுமையடியாகும். தன்மை முன்னிலைப் பெயர்களும் படர்க்கைப் பதிற்பெயர்களும், எழுவாய் வடிவில் நெடின்முதலவே அன்றிக் குறின்முதல் அல்ல.

7