உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

மொழிநூற் கட்டுரைகள்

வள்ளுவக் குலத்தானொருவனே ஓர் அருஞ்செயல்பற்றி அல்லது சிறந்த போர்த்தொழில்பற்றி நாஞ்சில் என்னும் மலையைக் கொண்ட ஒரு சிறு நாடு (சேரனால் அல்லது பாண்டியனால்) கொடுக்கப்பட்டிருக்கலாம். பண்டைக்காலத்தில் போர் வீரர் பெரும்பாலும் மறவரும் கள்ளருமாயிருந்தா ரேனும், பிற குலத்தாரும் அத்தொழிற்கு எத்துணையும் விலக்கப்பட்டில ரென்பது தேற்றம். ஆதலால் நாஞ்சில் வள்ளுவனை வள்ளுவக் குலத்தானாகக் கூறுவதற்குப் பெரிதுந் தடையில்லை. திருவிதாங்கூர்ச் சீமையைச் சேர்ந்த ஒரு நாடு வள்ளுவ நாடெனப்படுகின்றது. அது ஒருவேளை நாஞ்சில் வள்ளுவன் நாடாயிருந்திருக்கலாம்.

இனி, வள்ளுவன் என்னும் பெயரை வள்ளல் என்னும் பெயரின் மறுவடிவாகக் கொண்டு, அதற்கு உபகாரி என்னும் பொருளும் உரித்தாக்குவர். வள்ளல் என்னும் பெயரும் வள் என்னும் மூலத்தினின்றே பிறந்ததாயினும், அம்மூலம் உபகாரி யென்னும் பொருளில் வரும்போது, வள்ளல், வள்ளியன், வள்ளியான், வள்ளியோன், என்ற வடிவுகளை ஏற்பதல்லது வள்ளுவன் என்னும் வடிவை எவ்விடத்தும் ஏலாமையின், அது போலியுரையென மறுக்க. இதுகாறுங் கூறியவற்றால், வள்ளுவன் என்பது குலப்பெயரே யென்றும், அது நிமித்திகளையும் குறிக்குமென்றும், உபகாரி யென்றும் பொருளில் வாராதென்றும் அறிந்துகொள்க.