உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

கழகமெல்லாம் சூதாடுமிடமா?

'கழகம்' என்பது சிறப்பாகவும் பெரும்பான்மையாகவும் கற்றோர் கூட்டத்தையே குறிக்குமேனும், சிறுபான்மை சூதாடுமிடத்தையும் குறிக்குமாறு இலக்கியத்தில் ஆளப்பட்டிருப்பதால், இவ்விரு பொருள்களுள் எது சிறந்தது என்னும் ஐயமும், 'கழகம்' சூதாடுமிடத்தைக் குறித்ததெவ்வாறு என்னும் கலக்கமும், சிலர்க்குத் தோன்றியுள்ளன.

கழகம் என்னும் சொல்லின் வேரும் வரலாறும் தெரியின், இவ் வையமும் கலக்கமும் முற்றும் நீங்கிவிடும்.

குல் குல - குலவு, குலவுதல் = கூடுதல். -

குல

கல.

கல கலவி.

கல கலவை, கலப்பு கலப்பு – கலம்பு

கலம்பம் - கதம்பம்.

கலம்பு -கலம்பகம்

கல கலங்கு - கலக்கு- கலக்கம்

கல கலகம், கலாம், கலாபம், கலாபணை.

இருவர் அல்லது இரு கட்சியார் கலந்தே பொருவதால், கலத்தற் கருத்திற் போர்க்கருத்துத் தோன்றிற்று, கை கலத்தல் என்னும் வழக்கையும், பொரு, சமர் என்னும் சொற்களின் வேர்ப் பொருளையும் நோக்குக.

மேற்காட்டிய சொற்றிரிவுப் பட்டியினின்று, கலத்தற்சொற்கு, இருபாற் கூட்டம், கலப்பு, கலக்கம், கலகம் என்னும் நாற்பொருள்கள் தோன்றியுள்ளமை காண்க. நீரும் மண்ணும் போலப் பல பொருள்கள் அல்லது கருத்துகள் கலப்பதே கலக்கம்.

குல் - குள் - கள். கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல் ஒத்தல்.

கள் - களம் = ஏர்க்களமும் போர்க்களமும் போலப் பலர் கூடுமிடம். களம் - களன் = அவைக்களம்

களன் - கழனி = ஏர்க்களம் உள்ள வயல்.