உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

மொழிநூற் கட்டுரைகள்

கூடிப் பகைமுயற்சி வலியுறா வண்ணம், தமிழன்பரும் தமிழை வளர்க்க மடிதற்றுத் தாமுந்துறும் கழகங்களும் தமிழைத் தழீஇக் காப்பாராக.

முதலாவது இந்திப் பயிற்சி வேண்டுவதா என்றும், பின்பு அது கட் டாயமாய் வேண்டுவதா என்றும் நடுவு நிலையாய் ஆராய்தல் வேண்டும். காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்

ce

ஆய்தல் அறிவுடையார் கண்ணதே காய்வதன்கண்

-

உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்

குற்றமுந் தோன்றாக் கெடும்”

(அறநெறி.42)

(1) கருத்தறிவிப்பு, (2) கல்வியறிவு, (3) அலுவற்பேறு, (4) மொழி நூற் பயிற்சி, (5) விருப்பம் என்னும் ஐந்து காரணம்பற்றியே மக்களால் மொழி அல்லது மொழிகள் பயிலப்படுவனவாகும்.

ஒருவன் தனித்திருந்தால் ஒரு மொழி வேண்டுவதில்லை. பிறருடன் கலந்துறைந்தால் தன் கருத்தைப் பிறர்க்கறிவித்தற்கு ஒரு தாய்மொழியேனுந் தெரிந்திருத்தல் வேண்டும். தென்னாட்டார்க்குத் தமிழ் மலையாளம் முதலிய தாய்மொழிக ளிருத்தலால் தம் கருத்தை யறிவித்தற்குப் பிறிதோர் மொழி வேண்டுவாரல்லர்.

கல்வி, அலுவல் என்ற இரண்டிற்கும் தமிழ் ஒருகால் முழுத்துணையா யிருந்து இதுபோது ஆங்கில ஆட்சியினாலும் விஞ்ஞானக் கலை வளர்ச்சியினாலும் குறைபாடுள்ளதாயிற்று. ஆயினும், இலக்கணம், இசை, நீதி, காவியம், இல்லற சித்தாந்தம், மருத்துவம் முதலிய பல துறைகளில் இன்னும் இம்மை மறுமைப் பயன்களுக் கேற்ற பெரும்புலமை யளிப்பதும், தனியாகவும் ஆங்கில வாயிலாகவும் பல அலுவல்கட்கு ஆதாரமுமாக வுள்ளது. இலக்கணம் நீதி என்ற இரண்டை நோக்கின் உலக முழுவதிலும் ஒப்புயர்வற்றதாகவும் விளங்குகின்றது!

மொழிநூற் பயிற்சிக்கு உலகத்திலுள்ள மொழிகளெலாம் ஒக்க வேண்டுவவேனும், தமிழானது தன் தொன்மை, முதன்மை, தாய்மை, இயற்கையொலி, சொல்வளம், இலக்கியச் சிறப்பு முதலியவற்றால் இந்தியில் மட்டுமல்ல ஆங்கிலத்தினும் பன்மடங்கு சிறந்ததாகும்.

இந்தி கருத்தறிவிப்பு, கல்வி, அலுவல் என்னும் முக் காரணம்பற்றித் தென்னாட்டாருக்கு முற்றும் வேண்டுவதன்று, மொழிநூலறிஞர் உலக முழுவதினும் விரல்வைத் தெண்ணுமாறு அத்துணைச் சிலராவர். விருப்பம் பற்றி இந்தி கற்பவரும் சிலரே. ஆதலான் இவர்பொருட் டெல்லார்க்கும் பொதுவாய் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது கல்வி முறைக்கும் நியாயத்திற்கும் மாறாகும்.

வடநாட்டு மொழிகளெல்லாம் பெரும்பாலும் வடமொழியைத் தாயாக வுடையன. தென்னாட்டிலும் தமிழொழிந்த பிற மொழிகள் வடமொழித் துணையைப் பெரிதும் வேண்டுவன. இந்தியும் மகமதியரிற் பெரும்பாலார் பேசும் இந்துத்தானியும் ஏறத்தாழ ஒன்றே. ஆதலான் வடமொழிக் கிளையாகிய இந்தியைப் பொதுமொழியாக்கத் தமிழரொழிந்த