உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திப் பயிற்சி

97

பிறரெல்லாரும் இசையினும் இசையலாம். ஆனால், வங்காளத்தார் அதனை முற்றிலும் வெறுக்கின்றனர். பிறர் பெரும்பாலாராதலின் அவர் கொள்கை வலியுறுவதாகக் கூறலாம். ஆனால், புதுமொழிப் பயிற்சி எங்கும் அளவிற் பலரேனும் சிலரேனும் ஒவ்வொருவர்க்கும் தனித்தனி வருத்தமன்றே. பலரானால் வருத்தங் கூடுவதும் சிலரானால் குறைவது மில்லையே. மேலும், தமிழ்நாடு சிறு நாடேனும் தலைநாடன்றோ?

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறும் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்”

என்று நம் சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது சரித்திரமும் மொழிநூலும் நோக்கின் உயர்வுநவிற்சியன்றி உண்மை நவிற்சியே யன்றோ?

உலகத்தில் மக்கள் சராசரி அந்தக்கரண வலி இரு மொழியே பயில உதவும். 'ஆயிரம் பாட்டிற்கு அடி தெரியும்' என்றாற் போலும், 'Jack of all trades, master of none' என்றாற் போலும் நுனிப்புல் மேய்ச்சலாய் அரைகுறையாய்க் கற்பதானால் பலரும் பன்மொழிகள் பயிலலாம். ஆனால், அற்ப அறிவு அல்லற்கிடம் (Little knowledge is a dangerous thing') என்றபடி அது துன்பந் தருவதேயன்றி இன்பந்தருவதன்று. ஒருவருடைய காரியசித்தி பெரிதும் அவருடைய சொல்வன்மையைப் பொறுத்ததாகும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பர்.

66

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.642)

ஒருவர் சாதுரியமாயும் மாதுர்யமாயும் பேசினால் கருதிய காரியங்

கைகூடும்; பகைவரும் வயப்படுவர்.

66

'திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்

66

பொருளும் அதனினூங் கில்.'

""

'விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.'

என்றார் திருவள்ளுவர்.

(குறள். 644)

(குறள். 648)

ஒருவர் கூற்று, திட்டம் (precision), இனிமை, தூய்மை (purity), பொருத்தம் (propriety), விரைவு முதலிய குணங்களைத் தழுவிச் சிறந்த சொற்களைக் கொண்டுள்ளதாயின், மிக வலியுறுகின்றது. ஒருவர் பன்மொழி வல்லுநரேனும் அரைகுறையாய்க் கற்ற ஒரு புதுமொழியிற் பிழைபடப் பேசுவாராயின் அவர் இகழப்படுவதைக் கண்கூடாகக் காண்கின்றாம்.

இளமை முதல் இங்கிலீஷ் பயின்று இங்கிலீஷ் அடிக்கடி பேசுகிற பெரிய பட்டதாரிகள்கூடச் சில வேளைகளிற் பிழை விடுகின்றனர். இங்கிலீஷ் நன்றாய்ப் பயிலின் தமிழிற்கும், தமிழ் நன்றாய்ப் பயிலின்