உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திப் பயிற்சி

99

பயின்று பின்பு ஆங்கிலத்திற் ஆங்கிலத்திற் பயில்வோமெனின் ஒருவேலைக் கிருவேலையா? ‘ஈனனுக் கிருசெலவு' என்றன்றோ ஆகிவிடும்! ஆங்கிலங் கற்றால் உலகனைத்தும் செல்லும். இந்தியோ இந்தியாவிற்குள்தான் செல்லும். மேலும், அவ்வக் கலைவல்லாரால் எழுதப்பட்ட மூலநூல்களைக் கற்க இடமிருக்கும்போது அவற்றை ஏன் மொழிபெயர்த்துக் கற்க வேண்டும்? ஆங்கிலத்திற் புதிது புதிதாய் நூல்கள் தோன்றிக்கொண்டே யிருக்கும். அவற்றை யெல்லாம் மொழிபெயர்ப்பதாயின் ஒரு மொழிபெயர்ப்பு இலாகாவே நிலையாக வேண்டுமன்றோ? எத்துணைக் காலமும் பொருளும் முயற்சியும் வீணாம்! இங்கிலீஷை யாம் உயர்த்துக் கூறுவதால் இங்கிலீஷ் காரரின் அரசாட்சியை விரும்பிக் கூறுவதாக எண்ணற்க. இங்கிலீஷ் அரசாட்சி ஒழியலாம். இங்கிலீஷ்காரரும் நீங்கலாம்; ஆனால், இங்கிலீஷ் நீங்குவதற்கோ எட்டுணையும் இடமின்று. ஒவ்வொரு மொழியிலுள்ள இலக்கியமும் அவ்வம் மொழியைப் பேசுவாரின் கருத்து களைத் தழுவியதாகும். இங்கிலீஷ்காரரிடம் சில தீக்குணங்களிருப்பினும் நாம் பின்பற்றக்கூடிய பல நற்குணங்களுள வென்பதை நடுவுநிலையுள்ள எவரும் மறுக்கொணாது. ஆராய்ச்சி, நடுவுநிலை, சமுதாய நிலை முதலிய வற்றில் அவர் தலைசிறந்தவராவர். தர்ஸ்டன்(Thurston) எழுதிய தென் னிந்தியக் குலமரபு நூலும், கால்டுவெல் எழுதிய திராவிட ஒப்பிய லிலக்கணமும் அவர் ஆராய்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். ஆங்கிலர் நமது நாட்டிற்கு வந்து நம்மைப்பற்றியே நமக்கு அறிவிப்பது நமக்குப் பெரிதும் நாணைத் தருகின்றது. அங்ஙனம் அறிவித்தும் அவற்றை அறிந்தவர் ஆயிரத்திற் கொருவரே ஆவர். உண்மையான சரித்திரமும் மொழிநூலும் ஆங்கிலரே நமக்குணர்த்தினர். சுதந்தரம், சமத்துவம், சோதரத்துவம் முதலியவைபற்றிய பரந்த நோக்கும் திருந்தின வுணர்ச்சியும் ஆங்கில நூல்களாலேயே உண்டாகும். இந்தியருள் சீர்திருத்தம் விரும்புவா ரெல்லாம் ஆங்கில மறிந்தவராயும் விரும்பாதவரெல்லாரும் பெரும்பாலும் அறியாதவராயு மிருத்தல் காண்க.

இந்தி நூல்களோ குலப் பிரிவினையும் பிறப்புப்பற்றிய ஏற்றிழி புங் கூறி மேன்மேலும் கேட்டிற்கே நேர்வழி காட்டுவவாகும் தட்பவெப்ப நிலை, தொழில், ஒழுக்கம், மனிதன் கட்டுப்பாடு முதலியவை பற்றி இடையில் ஏற்பட்ட குலங்கள் படைப்புக் காலந்தொட்டே யிருப்பனவாயின், மேனாடுகளில் ஏன் அவை யில்லை? பிரமாவுக்கு இந்தியாவிற்குள்தான் அதிகாரமோ? தாழ்ந்தோர் சிறிதும் தலையெடா வண்ணம் அவர்களை அமிழ்த்திக் கொல்லுகின்ற அநியாயக் கொள்கை களும், சரித்திரப் புளுகுகளும், குலப்புரட்டுகளும், மந்திர தந்திர ஏமாற்றங் களும் மலிந்துள்ள இதிகாச புராணக் குப்பைகளே இந்தியிலுள்ளன. ஆகையால், இதுபோது இந்தியப் பொதுமொழியாயும் உலகப் பொதுமொழியாயும் இருக்கின்ற ஆங்கிலத்தை அதற்றிவிட்டு இந்தியை ஏற்படுத்தல் கோளரியை நீக்கிவிட்டுக் குள்ளநரியை இருத்துவதையே ஒக்கும்.