உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

ஒப்பியல் இலக்கணம்

பொருள் வரையறை

ஒப்பியல் இலக்கணமாவது, மொழிகளின் இலக்கணங்களை ஒன்றோ டொன்று ஒப்புநோக்கி, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல். இந்நாடு திரவிட நாட்டின் கூறான தமிழ் நாடாதலானும் இக்கட்டுரை மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலரிதழாதலானும், ஒப்பியல் இலக்கண மென்பது திரவிட மொழிகளின் இலக்கணவமைதிகளை ஒப்பு நோக்கு வதையே ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கும். ஆயினும், பல்வேறு மொழிகட்கும் ஏதேனுமொரு வகையில் தொடர்போ ஒப்புமையோ இருத்தலானும், ஒரு குடும்ப மொழிகளை ஒப்பு நோக்குவது போன்றே பல மொழிக் குடும்பங்களை யும் ஒப்பு நோக்குவதும் ஒப்பியல் இலக்கணமே யாதலானும், இக்கட்டுரை யிறுதியில், திரவிட மொழியமைதி ஆரிய மொழியமைதியொடும் ஒரு சிறிது ஒப்பு நோக்கப்பெறும். கால்டுவெல் கண்காணியாரும் இம்முறையை விரிவாகக் கடைப்பிடித்திருத்தல் காண்க.

ஒப்பியற் சிறப்பு

ஒப்பியல் என்பது, எல்லாக் கலைத் துறைகளிலும் உண்மையைக் காண்பதற்கு இன்றிமையாத முறையாம். ஆகவே, ஒப்பியல் என்று பெயரும் வாய்ந்த கலைகட்கும் நூல்கட்கும் அதன் இன்றியமையாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. கால்டுவெல் ஐயர் ஒப்பியலின் தேவையைத் தம் இலக்கண முகவுரையில் (ப. 10) பின்வருமாறு வற்புறுத்துகின்றார்:

“அவர்கள் (திரவிடர்) தங்கள் மொழிகளைப் பிறவற்றுடன் ஒப்பு நோக்க ஒருபோதும் முயன்றதில்லை; தங்கள் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிறமொழிகளுடன்கூட ஒப்பு நோக்கியதில்லை. மொழிக்குடும்பம் என ஒன்றுண்டு என்னும் கருத்தைக்கூட அவர்கள் மனம் பற்றியதில்லை. இதனால், அவர்கள் தங்கள் மொழியைப் படிப்பதில் எடுத்துக்கொண்ட அக்கறையானது, மதி நுட்பத்தோடும் பகுத்துணர்வோடும் கூடியதாயிராமல், நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக் குறைவான பயனை விளைத்துள்ளது. அவர்கள் மொழிநூல், அப்பெயராற் குறிக்கப்படக் கூடுமாயின், நம் காலம் வரையும், ஊழிகட்கு முன்னிருந்தவாறே தொடக்க நிலையிலும் துண்டு துணிக்கையாக வும் இருந்து வந்திருக்கின்றது. ஒப்பியல் தன்மையில்லாமையால் அது அறிவியல் திறமும் முன்னேற்றமும் அடையவில்லை. ஒப்பியற் கல்வி