உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

மொழிநூற் கட்டுரைகள் ஒவ்வோர் அறிவியல் துறையிலும் ஐரோப்பாவில் பெருநலம் பயத்திருக் கின்றது. இந்தியாவிற்கும் அது பெரிதுதவும் என்று எதிர் பார்க்கக் கூடாதா? தென்னிந்திய மக்கள், தங்கள் சொந்த மொழிகளை ஒப்புநோக்கிப் படிப்பதிலும் பொதுவாக ஒப்பியல் மொழி நூலிலும் விருப்பங் கொள்வாராயின் அது, அவர்களின் தனி யிலக்கணக் கல்வி இதுவரை பயன்பட்டதைவிட மிகமிகப் பல்வேறு வகைகளிற் பயன்படும் என்பதைக் காண்பார்கள். அவர்கள் செய்யுள் நடைப்பட்ட பிதிர்களையும் இன்னோசைப்பட்ட வெற்றெனத் தொடுப்பு களையும் உருப்போட்டுப் படித்துப் பொந்திகை (திருப்தி) கொள்வதை விட்டு விடுவார்கள்.”

வரலாற்றடிப்படை

ம்

எல்லாக்கலைகளும் நூல்களும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன வென்பது, எவரும் அறிந்த வுண்மை. வரலாற்றொடு முரணும் எந்நூலும் நூலாகாது. ஆதலால், மொழி நூலும் அதனை அடிப்படையாகக் கொள்ளல் வேண்டும்.

தென்னாட்டு வரலாறு உண்மையான முறையில் இதுவரை எழுதப் பெறவில்லை. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டே சுந்தரம் பிள்ளையும் வின்செண்டு சிமித்தும் கூறிப் போயினர். ஆயினும், இன்னும் அம்முறை கையாளப் பெறவில்லை. இதற்கு மாறாகத் தென்னாட்டு வரலாறு திறமையுடன் மறைக்கப்பட்டே வருகின்றது. இதனால், மகன் தந்தைக்கும் பேரன் பாட்டனுக்கும் முந்தியவர் என்பதுபோல் தலைகீழாகத் தமிழ் வரலாறும், தமிழ் நாட்டு வரலாறும், இருந்து வருகின்றன.

இந்து மாவாரியில் மூவேறு கடல் கோளால் முழுகிப்போன குமரி (Lemuria) நாட்டுச் செய்தியே தென்னிந்திய அல்லது தமிழக வரலாற்றுத் தொடக்கம். குமரி நாட்டுண்மை,

"முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

என்னும் புறநானூற்றடிகளாலும்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி”

(11:19-22)

(9:9-11)

என்னும் சிலப்பதிகார அடிகளாலும்,

'மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்

புலியொடு வின்னிக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்”

(104)

என்னும் முல்லைக்கலித் தரவாலும்,