உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழிநூற் கட்டுரைகள்

5

(1) திரவிட மொழிகளெல்லாம், முதற்காலத்தில், வேறுபாடின்றி அல்லது வேறுபடுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப் பெற்றமை.

(2) திரவிட மொழிகட் கெல்லாம் அடிப்படைச் சொற்றொகுதி பெரும் பாலும் ஒத்திருத்தல்.

(3) எல்லாத் திரவிட மொழிகட்கும் இலக்கண அமைதி ஒன்றா யிருத்தல்.

(4) திரவிட மொழிகளுள் ஒவ்வொன்றையும் செவ்வையாய் அறிய ஏனையவற்றின் அறிவு இன்றியமையாமை.

(5) தெலுங்கு கன்னடம் மலையாளம் முதலிய திரவிட மொழிகள் ஒவ்வொன்றாய்த் தமிழினின்று பிரிந்துபோனமை வரலாற்றாலும் மொழி நூலாலும் அறியப் பெறுதல்.

(6) தமிழல்லாத பண்டைத் தாய் மொழிகளும் பிற்காலத்துப் பல்வேறு கிளை மொழிகளாய்ப் பிரிந்து போனமை.

திரவிடத்தாய்

திரவிட மொழிகட்கெல்லாம் தாய் தமிழே. இதற்குச் சான்றுகளாவன:- (1) தமிழின் தொன்மையும் அது குமரி நாட்டில் தோன்றியமையும். (2) தமிழின் ஒலியெளிமை.

(3) வட மொழியும் பிற மொழியும் கலவாத் தூய்மையில் தமிழ் சிறந்திருத்தல்.

(4) தமிழின் சொல்வளம்.

(5) தமிழின் சொற் செம்மை.

(6) திரவிடத்திற்குச் சிறப்பான இலக்கியம் தமிழிலேயே இருத்தல்.

(7) தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை.

(8) கடைச் சங்க காலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழே வழங்கியமை.

தமிழின் திரவிடத் தாய்மையை, அதனின்று மிகமிகப் பிரிந்து போனதும் பெருநிலத்தில் வழங்குவதும் திரவிட மொழிகட்குள் பிறங்கித் தோன்றுவதுமான தெலுங்கொன்றன் வாயிலாய் அறியலாம்.