உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

எ-கா:

மொழிநூற் கட்டுரைகள்

வந்து + ஆன் = வந்தான்

உறங்கி + ஆன் = உறங்கியான் - உறங்கினான் பொலி.

ஒ.நோ : யான்-நான், யமன்-நமன்.

'ஆய்', 'போய்' முதலிய யகர மெய்யீற்று இறந்த கால வினை யெச்சங்கள் மலையாளத்தில் ஆயி, போயி என இகரவீற்று வடிவில் நிற்கும்.

ஆயி + ஆன் = ஆயியான் - ஆயினான்

-

ஆயி - ஆய் + ஆன் = ஆயான் - ஆனான் -ஆய் +

இனி வடநாட்டு மொழியாகிய இந்தியிலும் பிற ஆரிய மொழிகளிலும், எழுவாயையும் பெயர்ப்பயனிலையையும் இணைக்கும் 'இரு' என்னும் புணர்ப்புச்சொற்கும் Copula, மலையாளம் அடிகோலியது என்னலாம்.

எ-கா:

மலையாளம்

இதுஎந்தாகுன்னு?

இந்தி யஃகியா ஹை?

ஆங்கிலம்

What is this?

இது ஒரு மரமாகுன்னு.

யஃபேட் ஹை.

This is a tree.

வடநாட்டு ஆரியமொழிகளின் திரவிட அடிப்படை

ஆரியமொழிகளாகக் கூறப்படும் வடநாட்டு மொழிகளில், திரவிடச் சொற்கள் மட்டுமின்றித் திரவிட மொழியமைதியும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதை இந்திவாயிலாற் காட்டுவல்.

(1) ஆயா, போலா என ஆவீறுகொண்டு இறந்தகாலம் காட்டும் இந்தி வினைமுற்றுக்கள் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை யொத்தன.

(2) ஆயியே, போலியே என 'இயே' ஈறுகொள்ளும் இந்தி வேண்டு கோள் வினைகள், செய்யிய என்னும் வாய்பாட்டு வியங்கோள் வினை யொத்தன.

(3) படே படே, சல்த்தே சல்த்தே என அடுக்கிவரும் இந்திச்சொல் லிரட்டைகள், பெரிய பெரிய, நடந்து நடந்து என வரும் அடுக்குத் தொடரை முற்றும் ஒத்தன.

(4) வஃகியா கர்த்தா ஹை? (அவன் என்ன செய்கிறான்?), ராமா பாத் காத்தா ஹை (இராமன் சோறு உண்கின்றான்) என அமையும் இந்திச் சொற்றொடர்கள் முற்றும் தமிழொழுங்கைப் பின்பற்றியன.