உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழிநூற் கட்டுரைகள்

ஆங்கிலத் தமிழமைதி யொப்புமை

(1) தனிக்குறில் முன்னொற்றுயிர்வரின் இரட்டல்.

எ-கா:Thin+er=thinner, sit+ing=sitting.

(2) நிகழ்கால வினையெச்சம் எழுவாயாதல். எ-கா: To err is human.

எனக்குப் பாடத் தெரியும்.

(3) வினைக்காலங்களின் நால்வேறுபாடு.

எ-கா : நிகழ்காலம் வருகிறான் - தனிப்பு (Indefinite) வந்து கொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous) வந்திருக்கிறான் - நிறைவு (Perfect)

9

வந்து கொண்டிருந்திருக்கிறான்-நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous).

கால்டுவெல் ஐயரின் சறுக்கல்கள்

கால்டுவெல் ஐயர் தலைசிறந்த திரவிட மொழியாராய்ச்சி சொல் லாராய்ச்சி வல்லுனரேனும், தொல்காப்பியப் பயிற்சியும் சங்கநூற் கல்வியும் மொழியாராய்ச்சியும் அக்காலத்தன்மையாலும், எல்லாத் துறையிலும் ஆரியத் தலைமை எதிர்ப்பின்றியிருந்து வந்ததினாலும் தமிழின் தனித் தன்மையை யன்றித் தாய்மையையும் தலைமையையும் உணராது இலக்கண முள்ளிட்ட உயர்தரக் கலை நூல்கள் ஆரிய வழியினவென்றும், ஆன்மா பாவம் முதலிய பல கருத்துகளையுணர்த்தத் தமிழிற் சொல்லில்லை யென்றும் தமிழ்ப் பெயர் வேற்றுமை வகுப்பு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்றும் தமிழர் அல்லது திரவிடர் பொதுவாய்த் தாழ்ந்த நாகரிக நிலையினர் என்றும் கூறிப்போந்தார். இனி, திரவிட மொழிகளிற் செயப்பாட்டு வினையில்லையென்றதும், ஆரிய முறையை அவர் அளவையாகக் கொண்டதைக் காட்டும்.

தமிழின் பொது வியல்பு

தமிழ் உலக முதற்றாய் மொழியாதலால், சீன மொழியின் அசை நிலைத் தன்மையையும், ஆரிய மொழிகளின் விகுதி நிலைத்தன்மையையும், சித்திய மொழிகளின் கொளுவு நிலைத் தன்மையையும், சேமிய மொழிகளின் உயிர்த் திரிவுத் தன்மையையும், ஆப்பிரிக்க மொழிகளின் பாலிசைவுத் தன்மையை யும், அமெரிக்க மொழிகளின் தொகுதி நிலைத் தன்மையையும் ஒருங்கே கொண்டுள்ளது.