உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

66

மொழிநூற் கட்டுரைகள்

கழுவாக்காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ்வமளியும்” இழிக்கப்படுமாறுபோல இவனால் அவ்வவையும் இழிக்கப்படுமென்பதாம், என்பது அவர் சிறப்புக்குறிப்பு.

இவ்வுரையில் பள்ளியென்பது படுக்கை அல்லது படுக்கைக் கட்டில் என்று கொள்ளப்பட்டது. சான்றோரைத் தேவருக் கொப்பாகக் கூறுவது இலக்கிய மரபாதலால், இங்குப் பள்ளியென்பது தெய்வத்தன்மையுள்ள இடத்தைக் குறிப்பதென்று கொள்வதல்லது இன்பந் தரும் இடத்தைக்குறிப்ப தென்று கொள்வது பொருந்தாது. ஆகவே, பள்ளி என்பதற்குக் கோயில் என்பதே பொருளாம். சான்றோர் கூட்டத்துள் ஓர் அறிவிலி புகுதல், ஒருவன் கழுவாத காலொடு கோயிற்குள் புகுவதொக்கும். என்பதே வள்ளுவர் கருத்தாதல் வேண்டும். குளித்து விட்டு அல்லது கை கால் கழுவிவிட்டுக் கோயிற்குள் புகுதல், இன்றும் பல்வேறு மதத்தார்க்கும் வழக்கமாயிருத்தல் காண்க, தேவரைப் புலவரென்று திருவள்ளுவர் குறிப்பிடுவதையும்.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்”

என்று கூறுவதையும் நோக்குக.

(நாலடி. 151)

ஆகவே, ஏற்கெனவே கோயிலைப் பொதுப்படக் குறித்த பள்ளியென் னும் பெயரே, பிற்காலத்துத் தமிழகத்துப் புதுவதாக ஏற்பட்ட சமண பவுத்த கிறித்தவ முகமதியக் கோயில்களையும் குறிக்க ஆளப்பட்டிருத்தல் வேண்டும். எதுபோலெனின், ஆரிய மறையையே முதன்முதற் குறித்த வேதம் என்னும் சொல், பிற்காலத்துக் கிறித்தவமறையையே சிறப்பாகக் குறித்ததுபோலென்க.

வித்துக்கள் சேற்றிற் பதிந்து கிடத்தலைப் 'பள்ளிக்கிருத்தல்' என்று நாஞ்சில் நாட்டார் சொல்வதால், பள்ளம் என்னும் பொருளும்; அரசியல் தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டு அவன் அதைச் செலுத்தும் வரை மறியல் செய்தலைப் 'பள்ளிகம்பு வைத்தல்' என அந்நாட்டாரே வழங்குவதால் ‘வீடு என்னும் பொருளும்; இறந்த அரசன் உடலை எரித்த அல்லது புதைத்த விடத்துக் கோயிற் கட்டுவதைப் பள்ளிப் படை என்று இலக்கியமுங் கல்வெட்டும் கூறுவதால், கல்லரை என்னும் பொருளும்; பள்ளி என்னுஞ் சொற்குக் கொள்ளப் பெற்றன.

பள்ளி என்னும் சொல்லின் வேர் 'பள் என்பதும், வேர்ப் பொருள் 'பள்ளம்' என்பதும் ஆகும். பள்ளம் அல்லது தாழ்வான இடம் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளமான இடத்தில் வேலை செய்யுங்குலத்தான், (கீழே) படுக்கை, (படுத்துத் தங்கும்) மனை, (தேவமனை யாகிய) = கோயில், (முதற் காலத்துக்கோவிலில் நடத்த பெற்ற, கல்விச் சாலை, (பலமனைகள் சேர்ந்த) ஊர், (மனையும் ஊருமாகிய இடம் என்னும் எழு பருப்பொருள்களும் இவற்றுட் பலவற்றை நிலைக்களமாகக் கொண்ட இருபத்திரு நுண்பொருள்களும்,