உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்பொருள் வரிசை

11

நிகழ்தலின் அவ் உளநூலைத் தழுவிய ஏரண முறையும் பெரும்பாலும் இயற்கை யொட்டியே இருக்குமென அறிக. இவ்வுண்மைகளை அறியாதார் தமிழிலும் சொற்பொருள் வரிசையை ஆங்கிலத்திற்போல் வரலாற்று முறையில் அமைக்க முயல்வர். இதன் புலிமையை எடுத்துக்காட்டாற் காட்டுதும்.

‘பள்ளி' என்னும் சொற்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள பொருள்வரிசை வருமாறு:

1. இடம்

2. சிற்றூர்

3. இடைச்சேரி

4. நகரம்

5. முனிவராச்சிரமம்

6. சைன பௌத்தக் கோயில்

7. அரண்மனை

8. (தச்சன்) வேலைக்களம்

9. மக்கட் படுக்கை

10. தூக்கம்

11. விலங்கு துயிலிடம்

12. பள்ளிக்கூடம்

13. gmm

14. அறச்சாலை

15. FITMQ சாலை

16. வன்னியன்

17. பள்ளத்தி

18. குறும்பர் (சிற்றரசர்)

பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) குறிக்கப்பட்டுள்ள இன்னொரு பொருள் (19) ‘கிறித்தவக் கோயில்', என்பது, இவற்றுள் முதலும் இறுதியும் (1, 19) வரலாற்று முறை தழுவியவை: ஏனைய ஒருமறையுந் தழுவியவல்ல. இம்முறைகேடு சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சிறப்பியல்பாகும்.

இதுபோலுள்ள தமிழ் நூல்களுள் பழைமையான தொல்காப்பியத்தில், பள்ளி என்னும் சொல் இடம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.

"சொல்லிய பள்ளி நிலையின வாயினும்” (தொல். எழுத்ததிகாரம், 100) என்பது காண்க. இதனால், இடம் என்னும் பொருள் முதலிலும், கிறித்தவம் தமிழ்நாட்டிற் புகுத்தப் பெற்றபின் தோன்றிய கிறித்துவக் கோயில், என்னும் பொருள் இறுதியிலும், வைக்கப்பட்டன.

மேல் குறிக்கப்பட்ட பத்தொன்பான் பொருள்களொடு பள்ளம், வீடு, கோயில், கல்லறை (சமாதி) என்பவற்றையுஞ் சேர்க்கலாம். கோயில் என்றது ஈண்டு எல்லா மதங்கட்கும் பொதுவான இறையகத்தை.

கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதைபுகல்,

என்னும் குறட்கு

(840)

"சான்றோரவையின்கட் பேதையாயினான் புகுதல், தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக் கண்ணே வைத்தாற் போலும்”, என உறைத்தார் பரிமேலழகர்.