உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

பள் - பள்ளம்

மொழிநூற் கட்டுரைகள்

பள்ளன் = பள்ளமான வயலில் வேலை செய்பவன்

பள் - பள்கு - பள்குதல் = பதுங்குதல்,

பள் - பள்ளை = குள்ளமான ஆட்டுவகை

பள்ளையன் = குள்ளன்

பள்ளை பள்ளையம் = உண்கலம்.

பள்ளையம் போடுதல் = தெய்வத்திற்குப் படைத்தல்

பள்கு – பளகு - பளகு = குற்றம் (தாழ்வு)

பள் பண் = நீர்நிலை

பண்

பண்ணை = குழி, நெற்குத்துமாறு நிலத்திற் பதித்த நடுப்பள்ளக்கல், நீர் நிலை, மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்தி, மரக்கலம், விலங்கு துயிலிடம்.

பண் - பணி, பணிதல் = கீழ்ப்படிதல், பணி = தொண்டு, வேலை, தொழில். பணி பாணி, பாணித்தல் = காலந்தாழ்த்தல்.

பண் – படு = 1. (பெயர்) குளம், மடு. 2. (பெயரெச்சம்) இழிவான.

படு - படுகர் படுகர் = பள்ளம், வயல் மருதநிலம், நீர்நிலை,

படு பாடு பாடி = தாழ்வான வீடுகள் சேர்ந்த முல்லை நிலத்தார் அல்லது இடைச்சேரி.

=

பாடு - பாடை = கால்கழிகட்டில்.

படு - படை –படைத்தல் = உண்ணுமாறு கீழிடுதல்

படுத்தல் = தாழக்கிடந்து தூங்குதல்,

படு =

- படை = படுக்கை, தூக்கம்

படுதல் = விழுதல், சாதல், படுத்தல் = கொல்லுதல்

படு

படை = கொல்லும் ஆயுதம் அல்லது சேனை.

டு படி, படிதல் = அடியில் தங்குதல், தங்குதல், கீழ்ப்படிதல் விழுந்து வணங்குதல், அமுங்குதல், தணிதல், குளித்தல், தூங்குதல்.

இதுகாறுங் கூறியவற்றால், தமிழில் சொற்பொருள் வரிசை ஏரணமுறைப் படிதான் இயலும் என்பதையும், பள்ளி என்பது பள்ளம் அல்லது தாழ்வு என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தூய தென் சொல் என்பதையும், தெற்றெனத் தெரிந்து கொள்க.

வட மொழியில் (சமற்கிருதத்தில்), ளகர மின்மையால், பள்ளி என்னுஞ் சொல் பல்லி என்றும் பல்லீ என்றும் வழங்கும். இவற்றுள் முன்னதற்கு, சிற்றூர், காடுவாழ் மரபினர் குடியிருப்பு, குடிசை, வீடு என்னும் பொருள்களும்;