உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்பொருள் வரிசை

15

பின்னதற்கு சிற்றூர், குடிசை, வீடு, நகரம், ஒருகூடு முகத்தலளவு, சிறு வீட்டுப்பல்லி என்னும் பொருள்களும்; மானியர் உவில்லியம் சமற்கிருத - ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ளன. இவ் இரு சொல் வடிவுகட்கும் வேராகக் காட்டப்பட்டுள்ள சொல் pall (பல்ல்) என்பது, இவ்வேர்ப் பொருளாகக் குறிக்கப்பட்டவை 'போதல்' (to go), 'இயங்குதல்' (to move) என்பன. இவ் வேரைக்குறிக்குமிடத்து; ஒரு கால் பின்வரும் சொற்கட்கு மூலங்காட்டும் பொருட்டுப்பல்' என்னும் வேரையொட்டிப் படைக்கப்பட்டது! ('Invented after pal, prob. to explain the following words”) என்று மானியர் வில்லியம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது, பின்வருஞ் சொற்கள், என்று குறிக்கப் பெற்றவை, பல்ல, பல்லக்க, பல்லி, பல்லிக்கா, பல்லீ என்பன, பல் என்னும் வேர்க்குக் குறிக்கப்பட்ட பொருளும், போதல் (to go) என்பதே.

7

பல்ல = பெருங்களஞ்சியம், நெற்கூடு

பல்லக்க = தக்காணத்தில் ஒரு மாவட்டப் பெயரின் பிற்பகுதி. பல்லிக்கா = சிற்றூர், சிறு வீட்டுப்பல்லி.

பள்ளி என்னும் சொல், பள் என்னும் வேரினின்று திரிந்து பல பொருள்களைக் கொண்டிருப்பினும், சிறப்பாகப் படுக்கையை யுணர்த்து மென்பது, பள்ளி கொள்ளுதல், பள்ளி கொண்டான், பள்ளி கொண்ட பெருமாள், பள்ளி யெழுச்சி, பள்ளி மாடம், பள்ளி மண்டபம், பள்ளியந்துலா, பள்ளியம்பலம் முதலிய சொற்களால் அறியப்படும், படுக்கை என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளி என்னுஞ் சொல் முறையே, வீடு, கோயில், பள்ளிக்கூடம் முதலிய பொருள்களை உணர்த்தும். இங்ஙனமிருப்ப வும், இச் சொல்லை வடமொழியில் அதன் எழுத்து முறைக்கேற்பப் பல்லி என்றும் பல்லி என்றுத் திரித்துக்கொண்டு போதல் அல்லது இயங்குதல் என்னும் பொருந்தாப் பொருளை அதன் வேர்ப் பொருளாக பொருத்திக் காட்டுவது மட்டுமின்றி, பல்லி என்னும் ஊருயிரிப் பெயரையும் பள்ளி என்னுஞ் சொல்லொடு மயக்கி, அதனையும் வட சொல்லென ஏமாற்றுவது. அறிவாராய்ச்சி மிக்க இவ் இருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுனையும் ஏற்குமோ? கண்டு தெளிக. கடுகளவேனுங் கருத்துடையார்.

திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் மணி விழா மலர் 1958