உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட் பாகுபாடு

27

குழாய். குழாய்போன்ற ஒரு முன்னூட்டி (proboscis) யானைக்கும் தும்பி யென்னும் வண்டுக்கு மிருத்தல் காண்க. யானைக்குத் துதிக்கையும் வண்டுக்குத் தேனுறிஞ்சும் நெடு மூக்கும் முன்னூட்டியாகும். யானையின் துதிக்கை தும்பிக்கை யெனப்படுகிறது. இது முதலாவது தும்பியின் கை எனப் பொருள்பட்டு, இன்று பொருள் மறைந்து, அக்கைக்கே சிறப்புப் பெயராய் அல்லது தனிப்பெயராய் வழங்குகின்றது.

அரசு ஆற்றரசு பூவரசு என்னும் மரங்கள் ஒரே பெயரைப் பெற் றிருக்கின்றன. இம்மும்மரங்களும் நெஞ்சாங்குலைவடிவான (Cordate) இலையுடையனவாகும். அரசமரம் வெளிப்படையாகப் பூக்காதது. இதனால் அது பூவில்லாததென்றே கருதப்பட்டது.

பூவாது காய்க்கும் மரமுள”

என்றார் ஓௗவையார்.

பூப்பதாய் அரசு போன்ற இலையுடையது பூவரசு. அரசு போன்ற இலையுடையதாய் ஆற்றோரத்தில் வளர்வது ஆற்றரசு.

(3) வேறினப்படுத்தல்

வேறினப்படுத்தலாவது ஒரேயினத்தைச் சேர்ந்த பொருள்களை நுட்ப வேறுபாடுபற்றி வேறுபடுத்திக் கூறல்.

வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பு

முமிழ்நற வருந்தி யுறங்கு செஞ்சடையோன்”

என்பது கல்லாடம்.

(55)

"வண்டு தேன் ஞிமிறு சுரும்பு வண்டின் வகைகள்” என்றார். அதன் உரையாசிரியர்.

"முதலையும் இடங்கரும் கராமும்” (குறிஞ்சிப்பாட்டு, 267) என முதலை மூவகையாகச் சொல்லப்படுகின்றது. மூங்கிலில், உட்டுளையுள்ளது வேய் என்றும் உட்டுளையில்லாதது அமை என்றும் முள்ளுள்ளது கழை என்றும் முள்ளில்லாதது பனை என்றும் பிற பிறவாறும் கூறப்படுகின்றது. இவற்றுள், வேயும் அமையும் சிறு மூங்கிலும் கழையும் பணையும் பெரு மூங்கிலுமாகும். இப்போது வேய் துளைமூங்கிலென்றும் அமை கல்மூங்கிலென்றும் வழங்கு கின்றது. இலைகள் வடிவும் கனமும்பற்றி, இலை தாள் தோகை ஓலை என நால்வகையாகக் கூறப்படுகின்றன.

இங்ஙனமே பிறவும், இதுகாறும் கூறியவற்றால், தமிழ் முன்னோர் மிக நுண்ணறிவுடையவரா யிருந்தனர் என்பதும் பொருள்களை நன்றாயாராய்ந்து அவற்றைப் பலவகையிற் பாகுபடுத்தினர் என்பதும், ஒரு பொருட் பல பெயர் களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நுட்ப வேறுபாட்டைக் காட்டுமென்பதும் அறியப்படும்.