உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




LO

5

“உலக வழக்கு கொச்சை வழக்கன்று’”

இலக்கியமுள்ள எல்லா மொழிகளிலும் உலக வழக்கும் இலக்கிய வழக்கும் எனச் சொல்வழக்கு இருவகைப்பட்டுத்தான் இருக்கும். ஆயின் தமிழில் மட்டும் பண்டையிலக்கியமெல்லாம் செய்யுளிலேயே இருந்தமை யால், இலக்கிய வழக்குச் செய்யுள் வழக்கெனப்பட்டது.

வட வேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின்”

என்று பனம்பாரனார் கூறுதல் காண்க. இதில் “வழக்குஞ் செய்யுளும்” என்று சுருக்கி கூறியது முறையே உலக வழக்கையும், செய்யுள் வழக்கையும். பொது மக்களும் புலமக்களுமாகிய எல்லார் வாயிலும் வழங்குதல் பற்றி, உலக வழக்கே வழக்கெனச் சிறப்பித்து கூறப்பட்டது. சிறுபான்மையரான புல - மக்களே பாடும் செய்யு ளிருத்தல் பற்றிச் செய்யுள் வழங்குச் செய்யுளென்றே குறிக்கப்பட்டது.

'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முது சொலோ டங்கேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்

யாப்பின் வழிய தென்மனார் புலவர்"

6

(தொல்.)

என்னும் தொல்காப்பிய நூற்பா உரைநடையிலிருக்க வேண்டிய மூலச் செய்யுளுரையும் கல்லா மக்களும் கூறும் விடுகதைகளும், பண்டை நாளிற் செய்யுள் வடிவிலிருந்தமையைக் குறித்தல் காண்க.

உரையின் ஒருவகையே அருஞ்சொற்கட்குப் பொருள் கூறும் உரிச்சொற்றொகுதியும் (நிகண்டும்) திவாகரம், பிங்கலம் முதலிய உரிச்சொற் றொகுதிகள் இன்றும் செய்யுள் வடிவிலேயே இருத்தலை நோக்குக.

உலகம் என்னும் இடவாகு பெயர் உலகத்திலுள்ள மக்களெல்லாரையும் பொதுவாக குறிப்பினும், சொல் வழக்கைப் பொறுத்தவரையில், நாகரிகத்திலும் அறிவிலுஞ் சிறந்த பண்புடை மக்களையே சிறப்பாகவுணர்த்தும்

6

வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட்டாகலான”

(தொல். )