உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக வழக்கு கொச்சை வழக்கன்று

29

என்று தொல்காப்பியம் பிரிநிலை யேகாரங் கொடுத்து வரையறுத்துக் கூறுதல் காண்க.

இங்ஙனமிருப்பவும், தமிழ்ப் பகைவரான ஆரியரும் அவர் வழிப்பட்ட மேலையரும் கோடன்மாரும் தமிழியல்பறியாத் தமிழ் பேராசிரியரும், கல்லா மக்களும், கீழ் மக்கள் வழங்கும் இழிவழக்கையும் (Slang), கொச்சை வழக்கையும் (Barbarism) உலகவழக்கொடு (Golleqsualism) சேர்த்தொன்றாக கொண்டு, தமிழ் மரபொடும் இலக்கண நூலாரொடும் முரண்படுவர்.

மனைவியைப் பெண்சாதி என்பதும், பீர்க்கங்காயை பீச்சங்கா என்பதும் இவைபோன்ற பிறவும் இழிவழக்காம். வந்தது என்பதை வந்துச்சு என்றும், வைத்திருக்கிறான் என்பதை வச்சிருக்கான் என்றும் வழங்குவது இழிவழக்காம். இத்தகைய வழக்குகளின்றி இலக்கண நடையிற் பேசுவதே உயர்ந்தோர் வழக்கான உலக வழக்கம்.

6

ஆயின், சில தென்சொற்கள் கற்றார்க்கேயன்றி மற்றோர்க்குப் பொருள் விளங்காதனவாகவும், அவற்றிற்கு நேரான வடசொற்களும் பிற சொற்களும் எளிதிற் பொருளுணர்த்துவனவாகவும் இருத்தலாலும், கருத்தறிவிக்குங் கருவியே மொழியாதலாலும், தூயநடை தமிழுக்கேற்காதெனின், சில தென் சொற்களை வழங்காமையாலேயே அவை அருஞ்சொற்களாக மாறின வென்றும், ஒருகாலத்தில் எளிய சொற்களாகவே அவை வழங்கிவந்தன என்றும், அவற்றின் வழக்கைப் புதுப்பிப்பின் மீண்டும் அவை எளிய சொற்களாக மாறிவிடுமென்றும், தமிழின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அதன் சொல்வளம் இன்றியமை யாததென்றும், வடசொற்கள் தேவமொழிச் சொல்லென்னும் ஏமாற்றினாலேயே தேவையின்றி வடவரால் புகுத்தப்பட்டன என்றும், அவற்றைத் தாராளமாக வழங்கினதினாலேயே தமிழர் தாய்மொழி உணர்ச்சி இழந்து பிற உரிமை யுணர்ச்சியும் தன்மானப்பண்பும் மிக்க இக்காலத்தில் தமிழைத் தூய்மையாக வழங்குதலே தக்கதென்றும், அதுவே தமிழன் முன்னேறும் வழியென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவை அல்ல என்றும், தமிழின் தூய்மையைக் குலைப்பவரெல்லாம் வாள்போற் பகைவரும், கேள்போற் பகைவருமே யென்றும் கூறிவிடுக்க.

இனி வடமொழித்துணையின்றித் தமிழைத் தனித்து வழங்க இயலாதென்றும், இருசார் பகைவரும் கூறிக் கலாய்ப்பர். உலகிலுள்ள மூவாயிரம் மொழிகளுள், தமிழ் ஒன்றே தேவமொழியென்றும்

வளம்படுத்திய மொழியென்றும் தம்பட்டமடித்துக் கொள்ளும் வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழேயென்றும், வடமொழியே தமிழ்த் துணையின்றி வழங்காதென்றும், இவ்வுண்மை அண்மையிலேயே வெட்ட வெளிச்சமாகு மென்றும், அவர் அறிவாராக.

செய்யுள் வழக்கு, குறிப்பிட்ட சொற்களையும், சொல் வடிவுகளையுமே வழங்கி வருவதாலும், சுருங்கச் சொல்லல் என்னும் அழகைப் பெரிதாகப் பேணுவதாலும், உலக வழக்கினின்று மிகவும் வேறுபட்டதாகும்.