உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

மொழிநூற் கட்டுரைகள்

பண்டைச் செய்யுளிளெல்லாம் காடை, கவுதாரி என்னும் பறவைகள் குறும்பூழ், சிவல் என்னும் சொற்களாலேயே முறையே குறிக்கப்பெறும். செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செய்ம்மன், செயின் முதலிய செய்யுள் வினையெச்ச வடிவுகள் உலக வழக்கிலும் செய்து கொண்டு, செய்கிறதற்கு, செய்தால், செய்துவிட்டால் முதலிய உலக வழக்கு வினையெச்ச வடிவுகள் செய்யுள் வழக்கிலும் இடம்பெறுவதில்லை.

முழுங்கு என்னும் வடிவே மூலமாயினும், அதன் திரிபான விழுங்கு என்பதை செய்யுட்கேற்றதாகக் கொள்ளப்பெறும். இங்ஙனமே மிஞ்சு என்பதினும் அதன் திரிபான விஞ்சு என்பதே சிறந்ததாம். கொண்டுவா என்பதன் திரிபான கொண்டா என்பது செய்யுளில் இடம்பெறாது; ஆயின் கொண்டா என்பதன் திரிபான கொணா, கொணர் என்பவை இடம்பெறும்.

மக்களை உயர்ந்தோர், ஒத்தோர், இழிந்தோர் என மூவகுப்பாராக வகுத்து அதற்கேற்ப ஈறுகொடுத்துப் பெயரையும் வினையையும் ஆள்வது முற்றும் உலகவழக்கேயன்றிச் செய்யுள் வழக்கன்று ஒருமை பன்மை என்னும் எண் பகுப்பே செய்யுட் குரியதாம்.

இழிந்தோன்

ஒத்தோன்

உயர்ந்தோன்

பெயர்

நீன், நீ, அவன் நீம், நீர் (நீயிர்) அவர் நீங்கள், அவர்கள்

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி

இலக்கண மருங்கின் சொல்லா றல்ல."

வினை

வா, வந்தான் வாரும், வந்தார் வாருங்கள், வந்தார்கள்

என்று தொல்காப்பியம் (சொல் – கிளவி - 27) தெளிவாகக் கூறுதல் காண்க. இனி வினையின் முக்கால வடிவும் ஆங்கிலத்திற்போல் தனித்தனி தனிப்பு (Indifinite), தொடர்ச்சி (Continuous), நிறைவு (Perfect), நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous) என்னும் நால்வகை கொண்டியங்குவதும், தமிழில் உலக வழக்கே அன்றிச் செய்யுள் வழக்கன்று. சிலர் செய்யுள் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, உலக வழக்கிற்குச் சிறப்பாக உரிய கூறுகளையெல்லாம், பிற்காலத்தனவாகக் கூறுவர். அவர் மொழியியலை சிறப்பாகத் தமிழியலை அறியார். செய்யுள் வழக்கினும் உலக வழக்கே முந்தியதென்பதை அறிதல் வேண்டும்.

இறந்தகாலம்

தனிப்பு -வந்தான்

தொடர்ச்சி - வந்துகொண்டிருந்தான்

நிறைவு - வந்திருந்தான்

நிறைவு தொடர்ச்சி – வந்து கொண்டிருந்தான்.