உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக வழக்கு கொச்சை வழக்கன்று

நிகழ்காலம்

தனிப்பு - வருகின்றான்

தொடர்ச்சி - வந்து கொண்டிருக்கின்றான்

நிறைவு – வந்திருக்கின்றான்

நிறைவு தொடர்ச்சி – வந்து கொண்டிருந்திருக்கிறான்

எதிர்காலம்

தனிப்பு – வருவான்

தொடர்ச்சி -வந்து கொண்டிருப்பான்

நிறைவு - வந்திருப்பான்

நிறைவுத் தொடர்ச்சி – வந்து கொண்டிருந்திருப்பான்

இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி இன்று வழக்கு

31

வீழ்ந்தது. எதிர்கால நிறைவும், நிறைவுத் தொடர்ச்சியும் ஐய இறந்த காலத்தையும் உணர்த்தும்.

ஆங்கில நிகழ்கால வினையெச்சத்திற்கு (Present Participle) ஒத்த செய்து கொண்டு என்னும் தமிழ்த் தொடர்ச்சி வினையெச்ச வாய்ப்பாடு, தொன்று தொட்ட வழக்கேயன்றி இடைக்காலத்ததோ, ஆங்கிலத்தைப் பின்பற்றியதோ அன்று. கொள் என்னும் தற்பொருட்டு (Reflexive) துணைவினை (Auxiliary Verb) எங்ஙனம் தமிழ் மரபினதோ அங்ஙனமே கொண்டு என்னும் தொடர்ச்சிகாலத் துணைவினையெச்சமும் தமிழ் மரபினதாம். தமிழிலக்கண நூலார் நிகழ்கால வினையெச்சமாகக் குறிக்கும் செய்ய என்னும் வாய்பாடு, தன் எழுவாய் வினையொடு முடியும் போது, ஆங்கிலப் பொருட்டு வினையெச்சத்தை (Infinitive Mood) யொத்து எதிர்காலத்தையுணர்த்துவதால், உண்மையில் எதிர்கால வினையெச்சமேயாம். செயின் (செய்தால்) என்னும் குறிப்பதே தக்கது.

தனிப்பு என்னும் காலவகை வழக்குஞ் செய்யும் என்னும் இருவகை வழக்கிற்கும் பொதுவாம் நிறைவும் செய்யுட்கு ஏற்கும். (எ-கா) “ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள்ள தாதலின் (மணி - 3: 4) எதிர்ந்துளது எதிர்ந்திருக்கின்றது. (நிகழ் கால நிறைவு) தொடர்ச்சி வினையெச்சம் பொருள் செய்யுளில் முற்றெச்சத்தால் உணர்த்தப் பெறும்.

எ-கா :

ஆடினிர் பாடினிர் செலினே'

=

(புறம் - 109 :17)

ஆடினிர் பாடினீர் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இட வேற்றுமை உருபேற்ற தொழிற் பெயரும் இலக்கிய வழக்கில் தொடர்ச்சி வினைப் பொருளுணர்த்தும்.

எ-கா : தட்டுப்புடைக்கண் - தட்டுப்புடைத்துக் கொண்டிருந்த (கொண் டிருக்கின்ற, கொண்டிருக்கும்) போது.