உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

மொழிநூற் கட்டுரைகள்

ஒரு சொல்லின் திருந்திய வடிகைக் கண்டபின், அச்சொல்லாற் குறிக்கப்படும் பொருளின் சிறப்பியல்பை நோக்க வேண்டும். ஒரு பொருளின் சிறப்பியல்பு, அப்பொருள் முழுமையுந் தழுவியதாகவோ அதன் ஒரு மருங்கு பற்றியதாகவோ இருக்கலாம். பரிதி (வட்டமானது) என்பது முழுதுந் தழுவியது. வாழை (வழவழப்பானது) என்பது ஒரு மருங்கு (அடிமரம்) பற்றியது, வாழையினுஞ் சிறப்பாகத் தொடர்ந்து வாழ்வது மூங்கிலாதலால், வாழ்வது வாழை என்பது பொருந்தாது.

பல குணங்கள் பல பொருட்கும் பொதுவாயிருத்தலின், சிறப்பியல் பென்றது, பெரும்பாலும் ஒரு சார் பொருள்கட்குச் சிறப்பாயிருப்பதே. எ-கா : வள்ளம், வள்ளி, வளை, வளையம், வளையல், வண்டு, வண்டி, வணர், வணக்கம், வட்டு, வட்டி, வட்டில், வட்டை. இவையெல்லாம் வளைந்தது அல்லது வளையமாயிருப்பது என்னும் பொருள் கொண்டவையே.

குணம் என்பது தொழிலையும் தழுவும். எ-கா : கேழல் (நிலத்தை கிளைப்பது) ஒப்புமையும் ஒரு குணமே.

எ-கா : நுணா (நுணல் போலுங்காயையுடையது).

ஒரு சொல்லான் பல கருத்துகள் எழுப்பப் பெறலாம். அவற்றின் முன்மை பின்மைத் தொடர்பு அறியப்பட்ட பின்னரே, மொழிப்பொருட் காரணம் துணியப் பெறல்வேண்டும். சிலவிடத்துப் பல காரணங்கள் ஒத்த பொருத்தமுடையனவாகத் தோன்றும். அவற்றுள் மிகப் பொருத்தமானதை ஏரண முறையிலும் ஒப்பு நோக்கியுமே துணிதல் கூடும்.

G

எ-கா: விழா என்னுஞ் சொற்கு விழுத்தல், விழைதல் என்னும் இரண்டும் பொருட் காரணமாகத் தோன்றலாம். விழுத்தல் சிறத்தல், விழைதல் விரும்புதல், விரும்பிச் செய்வது என்னுங் காரணத்தினும் சிறப்புச் செய்வது என்னுங் காரணமே பொருத்தமாம். “சிறப்பொடு பூசணை” என்று வள்ளுவர் கூறியிருப்பதாலும் "சிறப்புச்செய்தல்” என்னும் வழக்குண்மை யாலும் பின்னதன் மிகுபொருத்தம் அறியப்படும். விழு விழா, வேள்வியே விரும்பிச் செய்யப்படுவது. வேள்வியொடு செய்யப்படும் விழாக்கள், ஆகுபெயர் முறையில் வேள்வி யெனப்பெறும்.

இனி சொற்றிரிவு முறைகளையும் முற்பட அறிந்துகொள்ளல் வேண்டும். எ.டு: இரு குறில் ஒரு நெடிலாகத் திரியும் என்னும் திரிவு முறையால், அகல்-ஆல் (விழுதூன்றிப் படரும் ஆலமரம்), வணங்கு வாங்கு

"