உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா?

37

முதலியனவும்; டகரம், ரிகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், படவர்- பரவர், விடிச்சி-விரிச்சி (மறை பொருளை வெளிப்டுத்தலான பாக்கத்து விரிச்சி) முதலியனவும், ழகரம் டகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், புழல் புடல் (புழலை-புடலை), குழல்-குடல் முதலியனவும்; 'இல்' ஈறு ஒரு குறுமைப் பொருட்பின் னொட்டு என்பதால், தொட்டி-தொட்டில் குடி-குடில் முதலியன வும்; அம் ஈறு ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு என்பதால், மதி-மதியம் (முழுமதி), நிலை – நிலையம் முதலியனவும்; உகரம் அகரமாகத் திரியும் திரிவு முறையால், குடும்பு-கடும்பு, நுரை-நரை (வெண்மை) முதலியனவும்; உகர ஊகாரம் முறையே இகர ஈகாரமாகத் திரியும் தரிவு முறையால் புரண்டை- பிரண்டை, தூண்டு தீண்டு முதலியனவும்; விளங்குதல் காண்க.

செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகளும் (Principles of Etymology) சொற்றிரிவு முறைகளும் (Modes of Derivation) எத்துணையோ பல. அவையும் அவற்றின் வகைகளும் எனது 'சொல்லாக்க நெறிமுறைகள்' என்னும் நூலிற் கூறப்பெறும்.

சொல்லாராய்ச்சி செய்வார் மேற்கூறியவாறெல்லாம் கற்றிருப்பதுடன் இறைவனால் இதற்கென அழைப்பும் (call) பெற்றிருத்தல் வேண்டும். அல்லாக் கால் உழைப்பெல்லாம் விழலுக்கிரைத்த நீராய்விடும். தமிழ்ச் சொல்லாராய்ச்சித் துறையில் தலைமையான அழைப்புப் பெற்றவர் கால்டுவெல் கண்காணி யாராவர்.

இக்காலத்தில் சிலர், மொழியாராச்சி செய்யாதும் மொழியாராச்சிக்கும் சொல்லாராய்ச்சிக்கும் வேறுபாடு தெரியாதும், சொல்லியல் நெறி முறைகளை யும், சொற்றிரிவு, முறைகளையும் அறியாதும், தாம் தலைமைப் பதவி பெற்றிருப்பது காரணமாகத்தருக்கி, எல்லாம் வல்ல சித்தரும் அனைத்து நூலுங் கற்ற அறிஞரும்போல் நடித்து பொய்யும் வழுவும் மலியச் சில சொல் லாராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்திருப்பதுடன், கால்டுவெல் ஐயர்காட்டிய வழி நின்று உண்மையான ஆராய்ச்சி செய்த பிறரை, நெறிப்பட ஆராயாதவர் என்று குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறியும் வருகின்றனர். எளிய சொற்கட்கு எவரும் வேர்ச்சொல் காட்டுவர். அரிய சொற்கட்குக் காட்டுவதே அரிது. சொல்லியல் நெறிமுறைகளை அறியாதார் கூறும் போலிச் சொல்லியல், பின்வருமாறு எழுதிறப்படும்.

(1) ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology)

எ-கா: பாராளுமன்று - parliament. பாராளுமன்று என்பது பார் ஆளும் மன்று என்னும் முச்சொற்றொடர் parliament என்பது parler (speak) என்னும் பிரெஞ்சுச் சொல்லும் ment என்னும் ஆங்கில விகுதியும் சேர்ந்த ஒரே சொல்

(2) உன்னிப்புச் சொல்லியல் (Guessing Etymology)