உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

எ-கா : அணில்

=

மொழிநூற் கட்டுரைகள்

அழகு அழகிய வரிகள்) உடையது.

அணி = அழகுகலம் = கல்லாற் செய்யப்பட்டது, வேந்தன் = வெம்மையாய். அதிகாரஞ் செலுத்துபவன். வேம் = வேந்தன்.

(3) அறிவாகுலச் சொல்லியல் (Pedantic Etymology)

=

எ-கா : கிளி கிளைப்பது (பேசும் பறவை)

மண் = மணப்பது (நாற்றமுடையது)

(4) அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology). எ-கா :நூல் (புத்தகம்) = இழைநூலும் எற்று நூலும் போலவது.

(5) குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) எ-கா : ஐயன் ஈ ஆரியன் (ஆர்ய)

அச்சன் ஈ அஜ்ஜ (பிராகிருதம்) ஈஈ ஆர்ய வெறுக்கை (செல்வம்) = வெறுக்கப்படுவது.

(6) வழூவுப் பகுப்புச் சொல்லியல் (Malanalytic Etymelogy) எ-கா : சாப்பாடு சாவதற்கு ஏதுவானது (சாப்பாடு)

(7) நகையாட்டுச் சொல்லியல். (Playful Etymology)

எ-கா : தோசை இருமுறை 'சை' என்று ஒலிப்பது

தோ (உருது) = இரண்டு.

இங்கு காட்டப்பட்டுள்ள எடுத்துகாட்டுக்களையெல்லாம் மறுக்கவும் விளக்கவும் புகின் விரியுமாதலின் அவற்றுள் நான்கை மட்டும் ஈண் டாராய்ச்சிக் கெடுத்துக்கொள்வல்,

(1) அணில், அணி = வரி, வரிசை,

அணி - அணில்

=

முதுகில் மூவரிகளையுடையது.

வேய்ந்

(2) வேந்தன் : வேய்தல் = மேலணிதல், முடிசூடுதல். வேய் = தோன் - வேந்தன் வேந்தன் = முடியணியும் உரிமையுள்ள சேர, சோழ பாண்டியருள் ஒருவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் நால்வகையரசர் பெயருள், வேந்தன் என்பது முடியணியும் உரிமையுள்ள மூவேந்தர்க்கே பொதுவாக வுரியதாம். இவ்வுரிமை கிறித்துவுக்கு முற்பட்ட காலமெல்லாம் கையாளப் பெற்று வந்தது.

கொன்றை வேந்தன் (சிவன்) என்பது கொன்றை வேய்ந்தோன் என்றே பொருள்படுதல் காண்க.

வேந்து என்னும் பாலீறில்லாப் பழவடிவமும் வேந்தன் என்று பொருள் படுவதே; செய்து என்னும் வாய்பாட்டு வினைமுற்றும் ஆதல் போன்று.