உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

மொழிநூற் கட்டுரைகள்

வளைவானது குடி-(வளைந்த) புருவம்.

குள்-குய்-குயம்-வளைந்த அரிவாள்.

குள்-கூள்-கூளி-வளைந்த வாழைப்பழம். கூள்-கூடு-வட்டமான நெற் களஞ்சியம்.

கள்-கொள்-வளைந்த காயிலுள்ள கரணம். கொள்-கொட்பு-சுழற்சி சுற்றுதல். கொட்டு-கொட்குதல்-சுற்றுதல். (கொட்கி)-கொக்கி-வளைந்த மாட்டுறுப்பு. (கொட்கு)-கொக்கு-வளைந்த கழுத்துள்ள ஒரு நீர்ப்பறவை வகை. கொக்கை-கொக்கி. கொட்டு-நெற்கூடு. கொட்டாராம்-களஞ்சியமுள்ள நிலம். கொட்டை-உருண்டை வடிவம், உருண்டு திரண்டவிதை, உருண்டைத்

தலையணை.

கொடு-வளைந்த. கொடுமரம்-வில்.

கொடுக்கு-வளைந்த முள்ளுறுப்பு. கொடுக்கன்-தேள்.

கொடுக்கி- தேட்கொடுக்கி (ஒருசெடி)

கொடி-வளைந்த தண்டுள்ள செடி

கொடிறு-குறடு, குறடு போன்ற வாயலகு.

குல்-(கூல்)-(கொல்)-கோல்-உருண்டு திரண்ட கொம்பு, கோற்றொடி- திரண்ட வளையல், கோலி-உருண்டை.

கொள்-கோள்-உருண்டையான (அல்லது சுற்றிவரும்) விண்மீன். கோளம்-உருண்டை. கோளா-உருண்டையான சிற்றுண்டி வகை. கோளம்- கோரம்-வட்டில் (வட்டமான கலம்)

கோள் - கோண்-கோணுதல்-வளைதல் சாய்தல், கோணம்-சாய்வு, சாய்ந்த மூலை. கோணன்-கூனன். கோணல்-சாய்வு, நெளிவு. கோணை-சாய்வு, பிறழ்வு. கோணையன்-மதிபிறழ்ந்தவன், குதருக்கவாதி. கோண்-கோடு- வளைவு, கோடுதல்-வளைதல். கோடல்-வளைவு, வளைந்த இதழுள்ள காந்தட்பூ. கோடி-வளைவு. கோடை-காந்தள். கோட்டம்-வளைவு, மதிலாற் சூழப்பட்ட கோயில், நிலாவைச் சூழ்ந்த ஊர்கோள் கோட்டம்-கோட்டகம். கோட்டை-வட்டமான நெற்களஞ்சியம், மதிலாற் சூழப்பட்ட இடம், நிலாவைச் சூழ்ந்த ஒளிவட்டம்.

இக்குடும்பத்தைச் சேர்ந்த பிற சொற்களுமுள. விரிவஞ்சி இம்மட்டில் நிறுத்தப் பெற்றது.

தமிழ்ப்பொழில் - துணர் 32 மலர் 1 ப-9-18. (1956, ஏப்பிரல், மே)

2