உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா?

41

அவற்றைத் தற்செயலாக நேர்ந்த ஒப்புமைகளெனத் தள்ளிவிடவும்முடியாது. அவற்றின் உண்மைத் தொடர்பைக் காட்டுதற்கு மொழி நூலொடு வரலாறு முதலிய பிற சான்றுகளுமுள.

மேற்காட்டிய சொற்கட்கெல்லாம் மூலம் தென்மொழியே என்பது,

பின்வரும் சொற்றொகுதியால் அறியலாகும்.

குல் என்பது வளைவுப் பொருள் தரும் ஒரு வேர்ச்சொல். அதனின்று, வளைவு கோணல் வட்டம் வளையம் உருட்சி திரட்சி, குழற்சி, சுழற்சி, சுற்றல் சூழல் முதலிய பல உளவியற்கருத்துள்ள பற்பல சொற்கள் தொடர்ந்து கிளைத்துள்ளன.

அவை வருமாறு

-

குல்-குலா-குலவு-குலாவு. குலவுதல் வளைதல்,

குல்-குர்-குர-குரம்-வட்டமான குதிரைக்குளம்பு. குரல் - வளைந்த தினைக்கதிர். குரகம் - வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை குரங்கு-வளைவு கொக்கி குரங்குதல்-வளைதல், குரவை-வட்டமாக நின்றாடுங் கூத்து-குரங்கு. குறங்கு-கொக்கி. குறங்கு-கறங்கு, கறங்குதல்-சுழலுதல், கறங்கு-காற்றாடி. கறங்கல்-வளைதடி, கூ. அ, திரிபு, ஒப்புநோக்க, முடங்கு. மடங்கு, குடும்பு- கடும்பு, குறகு-வளைந்த கழுத்துள்ள கருவி.

"

குல்-குன்-குன்னா. குன்னாத்தல்-உடம்பு கூனிப்போதல். குனி, குனிதல்-வளைதல், வணங்குதல். குனிப்பு-வளைந்தாடுங்கூத்து. குனுகு, குனுகுதல்-கடுஞ் சிரிப்பில் உடம்பு வளைதல் கூனல்-வளைவு முதுகுவளைவு. கூனி-வளைந்தசிற்றிறால் கூனை-கூனுள்ள தோற்சால்.

குல் குளை-குளவி-கொடுக்குள்ள தேனீ. குளிகை-மருந்துருண்டை, வளைதடி, திரட்சி-குழல், குழலுதல்-சுருள்தல்.

குல் குண்-குண்டு-உருண்டை, உருட்சி, திரட்சி. குண்டம்-உருண்டு திரண்ட பன்றி, குண்டன்-உருண்டு திரண்டவன், வளைந்தது. குண்டுசட்டி- உருண்ட சட்டி. குண்டா-குண்டுசட்டி, குண்டை. உருண்டு திரண்ட காளை. குண்டுச்சட்டி. குண்டலம்-வட்டம், சுன்னம் குண்டான காதணி.

குண்-குண-குணகு. குணகுதல்-வளைதல், குணங்கு. குணங்குதல், வளைதல். குணக்கு-வளைவு. குணலை-உடல்வளைவு, வளைந்தாடுங் கூத்து குணி-முடமானது. கணுக்கு-கதலணியும் உலோக வளையம். குணுக்குதல் வளைத்தல்.

குள்-குட்டு-முட்டை (தெலுங்குச் சொல்லான திசைச்சொல்) குடம்- உருட்சியானது, வளைவு, குட-வளைந்த. குடவு, குடவுதல்-வளைதல். குடக்கம் வளைவு, குடக்கி-வளைவானது. குடக்கியன்-கூனன். குடங்கு-குடங்குதல்- வளைதல். குடந்தம்-வளைவு, வணக்கம், வழிபாடு. குடந்தை-வளைவு. குடா-