உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரு என்னும் சொல் தென்சென்னை, வடசொல்லா?

51

திருவாசிகை திருவாடுதண்டு திருவாயமலர்தல் திருவிழா திருவிளக்கு திருவிளையாடல் திருவுளம் திருவேங்கடம் திருவோடு முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் தொன்று தொட்டு வழங்கிவருகின்றன.

தெய்வப் பெயர் அடியார் பெயர் தெய்வத்தின் அல்லது, தெய்வத் தொடர்புள்ள சினைப்பெயர் ஆடையனிப் பெயர் உளவுப் பெயர் வினைப் பெயர் இடப்பெயர் நூற்பெயர் முதலியன, தம் தூய்மையைக் குறித்தற்குத் திரு என்னும் அடைபெறுவது தொன்று தொட்ட வழக்காகும்.

எ-கா :-

தெய்வப் பெயர் அடியார்

சினைப்

""

"7

ஆடையணிப் பெயர்

உணவுப் வினைப்

""

27

இடப்

""

நூற்

27

திருமுருகன்

திருக்கண்ணப்பர், திருமழிசை யாழ்வார் திருச்செவி, திருக்கண் மலர்

திருப்பரிவட்டம், திருமாலை, திருக்கைக்காறை

திருக்கன்னலமுது, திருப்படிமாற்று திருப்பள்ளி யெழுச்சி, திருவூறல், திருக்காட்சி, திருக்கை வழக்கம்.

திருக்கற்றளி, திருமுற்றம் திருப்பரங்குன்றம்

திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்கடைக்காப்பு

பொருட் குணப் வாத்தியப்

""

""

திருவலகு, திருப்படிக்கம், திருமுட்டு

திருக்குறிப்பு, திருக்கோலம்

திருச்சின்னம், திருத்தாளம்

அரசர் தெய்வத் தன்மையுள்ளவராகக் கருதப்பட்டதினால், அவர் தொடர்புள்ள சொற்களும் திரு என்னும் அடைபெற்றன.

எ-கா : திருவாய்க் கேள்வி, திருமந்திரவோலை, திருமாடம், திருமாடம், திருமுகக்கணக்கு, திருமுகக்காணம், திருவாணை, திருமூப்பு, திருவாண் ழுத்திடுதல், திருநல்லியாண்டு, திருக்கைச் சிறப்பு.

அடியார்கள் தெய்வத்தன்மையுள்ளவராதலின், அவர்களொடு தொடர்புற்றவற்றின் பெயர்களும் திரு என்ற அடைபெறும்.

எ-கா : திருக்குகை, திருக்கூட்டம், திருக்கோவை, திருமடம், திருத்தொண்டர், திருநாள், (திருநட்சத்திரம்), திருவேடம்.

திருமகன், திருமகள் முதலிய பெயர்களில் திரு என்னும் அடைமொழி பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது.