உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

உத்தரம்' 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?

(நமது பாவாணர் அவர்கள் தனித்தமிழ் இயக்கக் காவலர். தமிழுக்குத் தனித் தமிழில் அகரமுதலியை (டிக்சனரி) தொகுத்தளிக்கும் பொறுப்பை நமது அரசு இவரிடம் தான் ஒப்படைத்துள்ளது. இவரன்றி அப்பணிக்கு அறிஞர் யாருளர்? மன்றம் 1968 இல் இப்பெருமகனாரின் படைப்புக்களை வெளிக்கொணர உருபா 7500 கொண்ட தொகையை மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களைக்கொண்டு அளித்துப் பெருமை கொண்டது)

தமிழின் சொல்வளத்தை அறியாதார், வடமொழி கடன் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான தென் சொற்களையும் வடசொற்களென்றே மயங்கி வருகின்றனர். அத்தகைய சொற்களுள், உத்தரம், தக்கணம் என்பன இரண்டாம்.

திரவிடனின் முன்னோனான தமிழன் பிறந்தகமாகிய குமரிநாட்டில், முதற்கண் தோன்றிய நாற்றிசைப் பெயர்கள், தென், வடம், கீழ், மேல் என்பன. அவை 4ஆம் வேற்றுமைக்குரிய குவ்வுரு பேற்றுத் தெற்கு, வடக்கு, கிழக்கு (கிழ்க்கு) மேற்கு என்றாகி, பின்னர் ஆட்சி பற்றி முதல் வேற்றுமையாகவே வழக்கூன்றிவிட்டன.

அவற்றுள், முன்னிரண்டும் நிலைத்திணைச் சிறப்பும், பின்னிரண்டும்

நிலமட்டமும் பற்றியன.

தென் என்பது தென்னை. தென்னுதல் கோணுதல், பெரும்பாலுந் தென்னிக் கொண்டிருப்பதால் தென்னை அப்பெயர் பெற்றது. தென்-தென்னை,

தென்-தென்கு-தெற்கு.

தென்னை இயற்கையாகத் தோன்றியது குமரிக்கண்டம். இக்காலத்தில் தென்னையின் பல வகைகள் இந்தோ மலையாவின் இயற்கையாக வளர்வதால் அந்நிலப் பகுதியே தென்னையின் பிறந்தகமாயிருக்கலாமென்று கருதப்படுகின்றது. ஆயின் அப்பகுதியும் குமரிக் கண்டத்தைச் சேர்ந்ததே யென்பதை அறிதல் வேண்டும். பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட எழு நூற்றுக்காவத நிலப்பரப்பிலிருந்த பல்வேறு நாடுகளைக் குறிக்குமிடத்து, அடியார்க்கு நல்லார் ஏழ்தெங்க நாட்டையே முற்படக் குறித்திருத்தலால், அந்நாடுகள் குமரிக்கண்டத்தின் தென்கோடியடுத்