உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உத்தரம், தக்கணம் எம்மொழிச் சொற்கள்?

57

திருந்தமை பெறப்படும். தென்கோடியில் தென்னை சிறப்பாக வளர்ந்தத னாலேயே, தென்றிசை அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

இங்ஙனமே நாவலந்தேயத்தின் வடகோடியிலும் வடமரம் (ஆலமரம்) சிறந்து வளர்ந்ததனால். வடதிசை அப்பெயர் பெற்றது. வடநாவலப் பகுதியான வங்கத்தில் அது சிறப்பாக வளர்வதனாலேயே, மேலைப் பயிர் நூலாரும் அதற்கு "வங்காள அத்தி" (Ficushem-gllensis) என இலத்தீனப்

பெயரிட்டிருக்கின்றனர்.

ஆலமரம் சூழ விழுதுவிட்டு வட்டமாக அகன்று வளர்வதால், வடம் எனப்பெயர் பெற்றது. வல்-வள்-வட்டு-வட்டம்-வடம்.

ஓ.நோ. பட்டம்-படம்=துணி. மானியர் வில்யம்சு சமற்கிருத-ஆங்கில அகர முதலியும், வட (vata) என்னும் ஆலமரப் பெயருக்கு வட்டம் என்பதையே பொருட் கரணியமாகக் கூறுகின்றது.

வட்டம் வ வட (வட்ட)

வடமொழியென்னும் சமற்கிருதத்தில், வட்டம் என்பது வருத்த என்றேயிருக்கும்மென்பது கவனிக்கத் தக்கது.

வட்டம் (தமிழ்) - வட்ட (பிராகிருதம்) - வ்ருத்த (சமற்கிருதம்)

நில மட்டம் இற்றைத் தமிழ் நாட்டிற் போன்றே குமரிக் கண்டத்திலும், மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால், அவ்விரு திசைகளும் முறையே மேல் கீழ் எனப்பெயர் பெற்றன.

உலகில் உயர்ந்த பனிமலை, ஒரு காலத்தில் கடற்கரையாய் இருந்தது. அன்று வடதிசை கடலால் தாழ்ந்தும், தென்திசை குமரிமலையால் உயர்ந்தும், இருந்தன. பின்னர் பனிமலையெழுந்த பின் இருதிசையும் சமமாயின. அதன் பின் குமரிமலை மூழ்கிவிடவே, வடதிசையுயர்ந்து தென்திசை தாழ்ந்தும் போயின. ஆதலால், வடதிசை உத்தரம் என்னும் பெயரும் தென்திசைக்குத் தக்காணம் என்னும் பெயரும் தோன்றின. அவற்றொடு ஏனையிரு திசைக்கும், கீழ் மேல் என்னும் பழைய கரணியம் பற்றியே குணம் குடம் என்னும் இரு பெயர்களும் உடன் தோன்றின.

குள்-குழி. குள்-குண்டு=குழி, பள்ளம் குள்-குண்-குணம்=பள்ளம் குண்டுங்குழியுமாயிருக்கிறது என்னும் வழக்கை நோக்குக.

குடு-குடுமி=உச்சி, மாடவுச்சி, தலையுச்சி உச்சிக்கொண்டை, உச்சிமுடி, மகுடம், மலையுச்சி, கொடுமுடி. குடு-குடம் =உயர்ச்சி, மேடு, குடநாடு=உயர்ந்த மலை நாடான சேரநாடு, மேல்நாடு.

கிழக்கு மேற்கு என்னுஞ் சொற்களையொத்த, குணம் குடம் என்பனவும் குணக்கு குடக்கு எனக் குவ்வுருபேற்றன.