உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

மொழிநூற் கட்டுரைகள்

தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழி யாதலால், சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடத்தையுஞ் சுட்டும் ஆ (அ) ஈ (இ) ஊ (உ) என்னும் முச்சுட்டும் முதன் முதல் மாந்தன் வாயில் தோன்றிய சுட்டொலிகளாக மட்டுமன்றி உயிரொலிகளாகவும் இருக்கின்றன. இதனாலேயே, அவை தமிழ் நெடுங்கணக்கில் முதலில் வைக்கப்பட்டிருப்பதுடன், இன்றும் ஆரியமொழி களிற்போல் மறையாதும் திரியாதும் இயல்பாகவே தமிழில் வழங்கி வருகின்றன. சுட்டுவகையிலும் அதன் வழிப்பட்ட மூவிடப் பெயர் வகை யிலும், தமிழ் (திரவிடம்) ஆரியத்திற்கு (சமற்கிருதத்திற்கு) முந்திய தென்றும், உலக முதன் மொழியொடு நெருங்கிய தொடர்புடைய தென்றும், கால்டுவெலார் தம் ஒப்பியலிலக்கணத்தில் ஆங்காங்கு மிகவெடுத்துரைத்துச் செல்லுதல் காண்க.

முன்னிலைப் பெயர்: ஊன் - உன் (ஒருமை). ஊம்-உம் (பன்மை)

உவன் உவள் உவர் உது உவை உங்கு என்பன முன்னிலைப் பொருள் களையும் இடத்தையுமே குறித்தலால், உகர அல்லது ஊகாரச்சுட்டு முன்மைச் சுட்டே. முன்மை சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்ட தாதலால், இடைமைச் சுட்டென்பது ஒரு மருங்கு பொருந்தும். ஆயின், சேய்மைக்கு வரம்பில்லையாதலால், முன்மை இடைமையாகலாம். இடைமை என்றும் முன்மையாகாது.

முன்மை அண்மைக்குச் சற்றுச் சேய்மையாதலால் முன்மைச்சுட்டு, தமிழிற்சிறுபான்மை சிறு சேய்மையையும் வடநாட்டு மொழிகளிற் சேய்மையையும் உணர்த்தும்.

G

எ-கா : உங்கு = நீ (நீங்கள்) இருக்குமிடத்து தனயரைக் கண்டிரோ வுங்கணென்ன" (சேதுபு 6:39)

.தோள் - உதர் (இந்தி) = அங்கு. முன்மைக் கருத்தினின்று முற்செலவுக் கருத்துத்தோன்றும்.

எ-கா :உய் = முன்செல், முற்செலுத்து, உந்து

முற்செலுத்து.

=

முன்தள். உகை

=

||

நிலமட்டத்திற்கும் நீர் மட்டத்திற்கும் மேற்பட்ட முற்செலவு பக்கவாட்டி லும் மேளோக்கியுமிருக்குமாதலால் முன்மைச்சுட்டு உயர்ச்சிக் கருத்தையுந் தழுவும். எ-டு: உக்கம் = கட்டித் தூக்குங்கயிறு உகப்பு = உயர்வு. உகள்தல் = குதித்தல். உகளித்தல் = குதித்தல். உளகத்தல் = எழுதல். உச்சம் = உயர்நிலை. உச்சி=உயரிடம்.

உத்தரம் = (1) முகட்டுக் குறுக்குப் பெருமரம் அல்லது இருப்புவிட்டம். (2) மேற்மடங்கல் = கூற்றுவன், கூற்றுவன் போல் அழிக்குந் தீ பட்டது. உத்தரமந்திரி = தலைமையமைச்சன்.