உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உத்தரம், தக்கணம் எம்மொழிச் சொற்கள்?

உப்புதல் = பருத்தெழுதல்

உம்பல் = உயர்ந்தயானை

உம்பர் = மேல், மேலுலகம், தேவர்

உம்பன் = உயர்ந்தோன்

உயர்தல் = மேலெழுதல், மேற்படுதல்

59

உவண் = மேலிடம் உவணம் = உயரப் பறக்கும் கலுழன். உவணை = தேவருலகம்.

உறி = உயரக் கட்டித் தூக்குங்கயிறு அல்லது தொடரி.

உன்னுதல் = உயரக்குதித்தல்

ஊர்தல் = ஏறிச் செல்லுதல்

ஊங்கு = உயர்வு, மேன்மை

உத்தரம் = 1. பனிமலையால் உயர்ந்த திசையான வடக்கு (திவா)

Uttara, mfn (compar fr. 1. ud; opposed to adbara. upper, higher, superior (e.g. ultare dantas, the upper teeth), RV; AV, TS: CHUP; Ragh, and c.; northern (because the northern part of India is high), AV; Mn; Susr.; pancat & c.” என்று மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகர முதலி கூறுதல் காண்க. 2. வடக்கில் தோன்றும் ஊழித்தீ (பிங்)

உத்தர மடங்கல் = வடவனல் என்னும் ஊழித்தீ (திவா).

குமரிநாட்டுக் காலத்தில் தமிழர் (நெய்தல் நிலப்பரவர்) கற்றுக் கடலோடிகளாயிருந்ததனால், வடமுனையில் அவ்வப்போது தோன்றும் ஒரு பல்வண்ணவொளியைக் கண்டு, அதற்கு அல்லது வடவனல் என்று பெயரிட்டனர்; அதையே ஊழியிறுதியில் உலகையழிக்கும் தீயாகவும் கருதினர்.

“வடவா வனலு மடநடைப் பிடியும்

அருமைப் பெயருங் குதிரையும் வடலை”(பிங். 988)

"வட

வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து” (அந்தகக். தனிப்)

"வெள்ளத் திடைவாழ் வடவனலை” (கம்பரா. தைலமா. 86)

"கடுகிய வடவனலைத் தினைவைத்தது”

அனல் - அனலம் (கலிங்-402)

“அக்கடலின் மீதுவட வனல்நிற்கவில்லையோ” (தாயு, பரிபூர் .9)

மேலையர் வடவனலை, Aurora (down) Borealies (northern) என்று ஆங்கிலத்திலும், வழங்குவது முற்றும் பொருளொத்திருத்தல் காண்க.