உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

மொழிநூற் கட்டுரைகள்

வடமொழியாளர் வடவை என்னும் தென்சொல்லை, வடவா, வடவா முகம், வடவாமுகாக்கினி, படபா, படபாமுகம், படபா முகாக்கினி என்று திரித்தும் விரித்தும், பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று, பொருந்தாப் பொய்த்தலாகப் பொருள் கூறுவர். அதைத் தமிழர் நம்பிய பின்னரே “வடவைக் கனன்மாவும்" (தக்கயாகப் 694) என்று ஒட்டக்கூத்தரும் பாடநேர்ந்தது. இதனால், தமிழ்ச்சொல் திரிக்கப்பட்டதொடு தமிழர் மதியும் திரிக்கப்பட்டமை காண்க.

தக்கு=தாழ்வு தெ., க. தக்கு (taggu) அவர்க்குத் தக்குத் தொண்டை, அவர் தக்கிலே பாடுகிறார். என்னும் வழக்குகளை நோக்குக.

தக்கு – தக்கணம் = நிலமட்டத்தில் தாழ்ந்த தென்றிசை, தென்னாடு (decan) தக்கணம் - வ. தஷிணம்

வடமொழியாளர், தஷிணம் என்னும் சொல்லைத் தெற்கு என்னும் பொருளில், தஷிணாக்கினி, தக்ஷிணாயனம், தக்ஷிணாசலம் (பொதியம்), தக்ஷிண பாஞ்சாலம், தக்ஷிணாமூர்த்தி என ஆளுவர் ஆயின், தக்ஷிணம் என்னும் சொல்லிற்குத் தக்ஷ் என்பதை மூலமாகக் கொண்டு அதற்குத்திறமை யாயிரத்தல் அல்லது வலமையோடிருத்தல் என்று பொருள்கூறி, கிழக்கு நோக்கும்போது தென்றிசை வலப்புறமும் வடதிசை இடப்புறமும் இருப்பதால் தக்ஷிணம் என்னும் சொற்குவலம் என்றும் உத்தரம் என்னும் சொற்கு இடம் என்றும் பொருள் தோன்றினவென்று கரணியங் காட்டுவர்.

தக்ஷிணம் பரி = வலம் வா, வலஞ்சுற்று.

=

ப்ரதக்ஷிண = வலம் வருகை, வலர் சுற்றுகை.

தகுதியென்னுஞ் சொற்கு வல்லமையென்றும் பொருளிருப்பதால் தக்ஷ் என்னும் வடசொல் தகு என்னுந்தென் சொல்லின் திரிபாகவுமிருக்கலாம். ஒ. நோ. L. dexter = of or on the right-hand side.

E. dexterous = deft, adroit, clever, using right hand by preference E; ME. deft = dexterous skilful.

E. daft. ME. daffte = OE ged & fte (Goth gadaban to be fit) orig. Sense, fitting, suitable.

தக்ஷ் என்னும் வடசொற்கும், (dextes) என்னும் இலத்தீனச் சொற்கும், மூலம் எதுவாயினும், உத்தரம், தக்கணம் என்னும் இரு திசைச்சொல்லும் தென்சொல்லேயென்பதற்குச் சான்றுகளாவன:-

1. உத்தரம் தக்கணம் என்பனவற்றொடு சேர்ந்து வழங்கப்பெறும் குணம் குடம் என்னும் திசைப்பெயர்கள், தூய தென்சொல். அவை வடமொழியில் இல்லை. அவற்றோடு சேர்ந்த ஏனையிரண்டும் தென்சொல்லாகவேயிருத்தல் வேண்டும்.