உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உத்தரம், தக்கணம் எம்மொழிச் சொற்கள்?

61

2. உயர்ந்தோன் தாழ்ந்தோன் என்பன போல, உத்தரம் தக்கணம் என்னும் இரண்டும் ஒன்றிற்கொன்று எதிரான உறவியற் குறியீடுகள் (Relative

terms).

சமற்கிருதத்தில், உத்தரம் என்பதற்கு நிலவுயர்ச்சியையும் தக்ஷிணம் என்பதற்கு வலப்புறத்தையும், கரணியமாகக் காட்டுவது பொருந்தாது.

3. உத்தரம் என்னும் சொல்லிற்கு அடியான உகரச் சுட்டும், தக்கணம் என்னும் சொல்லிற்கு மூலமான தக்கு என்னும் முதனிலையும் தூய தமிழ் 4. குமரிநாட்டில் தோன்றிய தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியது.

5. உத்தரம் தக்கணம் என்னும் நாட்டுப்பெயர்கள் அல்லது திசைப்பெயர்கள், தமிழரும் அவர் வழியினரான திரவிடரும் தொன்றுதொட்டு வாழும். நாவலந் தேயத்திலன்றி, வேறெவ்வாரிய நாட்டிலும் என்றேனும் வழங்கியதில்லை.

கடவுள் வழிபாடின்றிக் கதிரவன் வணக்கத்தையே சிறப்பாகக்கொண்ட வேதஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபின்னரே, காலைக் கதிரவ வணக்கத்தின் போது தக்கணம் வலப்புறமும் உத்தரம் இடப்புறமும் இருத்தல் கண்டு, அவ்விருதிசைப் பெயர்கட்கும் முறையே வலம் இடம் எனப் பொருள் கொண்டிருத்தல் வேண்டும்.

“கிழக்கு” முதலிய முன்றோன்றிய நாற்றிசைப் பெயரும் உலக வழக்கில் ஆழ ஊன்றிவிட்டதனால், 'குணக்கு' (குணம்) முதலிய பிற்றோன்றிய நாற்றிசைப் பெயரும் செய்யுள் வழக்கென்னும் இலக்கிய வழக்கிலேயே இடம்பெறலாயின.

உலக வழக்கிலின்மையாலும் பொய்யுடை வடவர் சொல் வன்மை யினாலுமே, உத்தரம் தக்கணம் என்னும் இரு தென் சொற்களும் வடசொல் லெனும் மயக்கத்திற்கு இடமாயினவென, இக்கட்டுரையினின்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க.

முதல்தரம், கடைத்தரம், மேல்தரம், கீழ்த்தரம், நடுத்தரம், இடைத்தரம், சிறுதரம், பெருந்தரம், என்பன போன்றதே உத்தரம் (உயர்ந்த நிலை) என்னும் வழக்கும் புன்க வடமொழியாளர் இவ்வடிவை உறழ்தரம் (comparative degree) ஆக்கிக் கொண்டனர். அதனால் உத்+தர (led + tara) என்று பகுப்பர். அது கண்டு மயங்கற்க.

முரட்டுக் குறுக்குப் பெருமரம் உத்தரம் என்று பெயர் பெற்றிருத் தலையும் நோக்குக.