உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அள் - அண் அணவு, அணை

மொழிநூற் கட்டுரைகள்

அள் - அட்டு. அச்சு (ஒத்த பொருளமைக்குங் கருவி)

அண் - அண்டு

அத்து, அம் முதலிய சொற்களும் 'அள்' அடியினின்று அமைந் தவையே, அத்துதல் - ஒட்டுதல், இணைத்தல். அம் - அமர். அமர்தல் ஒத்தல், பொருந்துதல்.

‘உள்’ அடியன் பின்னைத் திரிபு

உள் - இள். இண்

இணர், இணங்கு, இண.

இள் - (இய்) இயை - இசை

இள் - இழை

இய் - எய் ஏய்.

ளகர மெய்யீறு பல சொற்களில் யகரமெய் யீறாகத் திரியும். எ-கா : தொள் - தொய் - பொள் - பொய் – வள்

-

கூர்மை

வய். வை இழைதல் - உராய்தல், உளம் பொருந்துதல், ஒன்றிப் பழகுதல் எய்தல் - ஒத்தல் “தேனெய் மார்பகம்” (சீவக 2382) உகரச் சொல், முன்மைக் கருத்திலும் உயர்ச்சிக் கருத்திலும் வகரமெய்ச் சேர்க்கை பெறுவது போன்றே, ஒப்புமைக் கருத்திலும் பெறும் முன்மைச்சுட்டு.

உவ், உவக்காண், உவை

உவ்வி (தலை) உவ, உவண், உவணை உயர்ச்சிக் கருத்து

(உவ்) - உவ (உவர்) - இவர் ஒப்புமைக் கருத்து. இவர்தல் - ஒத்தல்.

உவமை என்னுஞ் சொல் ஒப்புமைக் கருத்துள்ள 'உவ' என்னும் முதனிலையினின்று பிறந்ததாகும் உவத்தல் என்னும் தொழிற் பெயர்க்கு விரும்புதல், பிரியமாதல், மகிழ்தல் என்னும் பொருள்களும் உவகை என்னும் தொழிற் பெயர்க்கு அன்பு, காமம், இன்பச் சுவை (சிருங்காசரசம்) மகிழ்ச்சி என்னும் பொருள்களும், உவப்பு என்னும் தொழிற் பெயர்க்கு விருப்பம், மகிழ்ச்சி, பொலிவு, என்னும் பொருள்களும். பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. மனம் ஒத்திரா விட்டால், விருப்பமும் அன்பும் காமமும் இன்பமும் மகிழ்ச்சியும் எங்ஙனம் நிகழும்? இவற்றிற் கெல்லாம் அடிப்படை உளம் ஒத்தல் அன்றோ!

_

‘உவகை’ உவப்பு முதலிய சொற்கள் போன்றே உவமை என்பதும் ஒரு தொழிற் பெயராகும். 'உவ' பகுதி 'மை' விகுதி. ஒப்பு நோக்க : இள + மை இளமை பொறு + மை - பொறுமை. இளத்தல் = மென்மையாதல்.

+

ஒருவினைப் பகுதி பல விகுதிகளையேற்றுப் பலதொழிற் பெயர்களை ஆக்குதல் இயல்பாதலால். 'உவ' என்னும் பகுதி (தல்', 'கை', 'பு' உ, மை, மம், மானம்” என்னும் பல விகுதிகளை யேற்று முறையே உவத்தல், உவகை, உவப்பு. உவவு, உவமை, உவமம், உவமானம், என்னும் பலதொழிற்