உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உவமை தென்சொல்லே

71

பெயர்களைத் தோற்றுவிக்கும். இவற்றுள் முதல் நான்கும், உவமைப் பொருள் இழந்துவிட்டன, அல்லது அவற்றை அப்பொருளில் ஆளும் இலக்கியப் பகுதிகள் இறந்து பட்டன.

'மம்' ஒரு தொழிற் பெயரீறு என்பது, உருமம், பருமம், முதலிய சொற்களால் உணரலாம். உருத்தல் வெப்பமாதல், உருமம் வெப்பமான நண்பகல்.

“மம்” ஈறு “மை” யீற்று திரிபெனக் கொள்ள இடமுண்டு.

ஒ. நோ : செய்யாமை - செய்யாமல்.

செய்யாமை போனான், செய்யாமே போனான், செய்யாமற் போனான், என்னும் முத் தொடரும் ஒரு பொருளனவாதல் காண்க.

Ce

மன்னுதிரு வண்ணா

மலைச்சம் பந் தாண் பிற்குப்

பன்னு தலைச் சவரம்

பண்ணு வதேன் - மின்னின்

இளத்த விடை மாதர் இவன் குடுமி பற்றி

வளைத் திழுத்துக் குட்டா மலுக்கு”

என்னும் காளமேகர் பாடலில், குட்டாமல் என்பது குட்டாமலுக்கு என்று உருபேற்று வருவதால் 'செய்யாமல்' என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்ச வடிவம், வினை எச்சமாய் ஆளப்படும். செய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற் பெயரின் திரிபாயிருக்கலாம் என்று உய்த்துணரப் பெறும். அஃறிணைப் பெயர்களின் மகரவிறுதி னகரவிறுதியாவது பெரும் பான்மையாதலால் உவமம் என்னும் பெயர் உவமன் என்று திரியும்.

ஒ. நோ : பருமம்

தடுமம்

திறம்

கடம்

பருமன்

தடுமன்

திறன்

கடன்

தொழிற் பெயர்

பிற பெயர்

+

அம்

விழுமம் என்னும் தொழிற் பெயர் விழு + மம் என்றும், விழும் என்றும் பிரித்தற்கு இடந்தரும். ஆயின் உருமம், பருமம் என்பன இடந்தரா, விழுத்தல் - சிறத்தல், விழுமுதல் - சிறத்தல்.

மானம் என்னும் சொல் தொழிற் பெயரீறாய் வருவதை, அடைமானம், கட்டுமானம், தீர்மானம், படிமானம், பிடிமானம், பெறுமானம், வருமானம் முதலிய தொழிற் பெயர்களின்று அறிக.

உவமை என்னும் பெயரின்று உவமித்தல் என்னும் வினை பிறக்கும். ஒருமை என்னும் பெயரினின்று ஒருமி - த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. உவமித்தல் ஒன்றனை ஒன்றிற்கு ஒப்பாகக் கூறுதல்.

7