உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

மொழிநூற் கட்டுரைகள்

இங்ஙனமே, உவமானம் என்னும் பெயரினின்று உவமானி த்தல் என்னும் வினை பிறக்கும். தீர்மானம் என்னும் பெயரினின்று தீர்மானி த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. தீர்மானம் முடிபு. தீர்மானித்தல் முடிபு செய்தல் உவமானித்தல் உவமித்தல்.

உவப்பு உன்னும் சொல் முற்கூறியவாறு உயர்ச்சிப் பொருளையுந் தரும்.

-

உவ - உவர். இவர் - இவர்தல் = உயர்தல், ஏறுதல்

=

உவ உவப்பு. உயரம், உவ = உக

உவ உவண் மேலிடம். உவண்

உகப்பு = உயர்வு

உவணை தேவருலகம்.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”

I

என்று தொல்காப்பியங் கூறுவதால் (1224) உயர்ந்த பொருளை ஒப்பாகக் கொள்வதே உவமையின் அடிப்படை நெறிமுறை என்று கொண்டு உவமைச் சொல்லிற்கு உயர்வுப்பொருள். கொள்வது பொருந்தாது. தொல்காப்பியம் உயர்ந்தது என்று குறித்தது 'சிறந்தது' என்னும் பொருளது. சிறப்பு உயர்வு சிறப்பு. இழிவு, சிறப்பு என இருதிறப்படும். உயர்ந்த பொருளுக்கு மிகவுயர்ந்த பொருளையும் இழிதே பொருளுக்கு மிக இழிந்த பொருளையும் உவமங்கூற வேண்டும் என்பதே தொல்காப்பியர் கருத்து.

எ-கா :

ஊரங் கணநீர்

உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித்

தீர்த்தமாம்"

கங்கையாற்றிலும் சாக்கடை கலந்து கங்கை நீராம் என்னும் எடுத்துக் காட்டுவமையில் மேலோர்க்குக் கங்கையும் கீழோர்க்குச் சாக்கடையும் உவமமாதல் காண்க. வேற்றுமை குறிக்கும் சொல்வேற்றுமை என்றே பெயர் பெற்றாற் போல் ஒப்புமை பற்றிய அணியும் ஒப்புமை குறிக்கும் சொல்லா லேயே அழைக்கப் பெறுதலே முறைமையாம்.

வடமொழியில் “உபமா” உபமான என்னும் இருவடிவுகளே உள. இவை முறையே, உவமை, உவமானம், என்பவற்றின் திரிபுகள், உவமம், உவமன், உவமி, உவமானி என்னும் வடிவுகளும் சொற்களும் வடமொழியிலில்லை. அறியுங்கருவி அல்லது அளவைப் பெயர் 'ஆன' என்றும் கூறின், அதனால் அறியப்படும் பொருளின் பெயர் 'ஏய' என்று இறுவது வடமொழி மரபு.

எ-கா: ஞான(ம்) - ஞேய(ம்) அனுமான(ம்) - அனுமேய(ம்) பிரமாண(ம்) - பிரமேய(ம்)

இம்முறைப்படி உபமானத்தினால் அறியப்படுவது உபமேய(ம்) என்றாயிற்று. இது பிற்கால வளர்ச்சி மானம் என்பது தனி நிலையில் அளவு