உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

மொழிநூற் கட்டுரைகள்

'மை' விகுதி. வந்தமை. வருகின்றமை, என்பன போன்ற சொற்களில் தொழிற் பெயர் விகுதியாகவும், சிறுமை, பொறுமை என்பன போன்ற சொற்களில் தொழிற் பண்புப்பெயர் விகுதியாகவும், நன்மை, தீமை என்பன போன்ற சொற்களில் பண்புப் பெயர் விகுதியாகவும் இருக்கும்.

வடமொழியில் 'உபமா' என்னும் சொல்லில் 'உப' என்பது இடைச் சொல்லான முன்னொட்டு (உபசர்க்கம். Prefix) என்றும் 'மா' என்பது அளவு குறித்த சொல்லென்றும் கொண்டு 'உபமா' என்பதற்கு ஒத்த அளவு ஒன்றினைக் கொண்டு, ஒன்றை அளத்தல், ஒப்பு நோக்கு, ஒப்புமை, உவமை என முறையே பொருள் கூறப்படும். ஆகவே, 'மா' என்பதே சிறந்த உறுப்பாம். இதனால் தமிழில் நிலைமொழி அல்லது பின் மொழிப் பொருள் சிறந்தும் வடமொழியில் வருமொழி அல்லது முன்மொழிப் பொருள் சிறந்தும் உள்ளன என்றும் தெளிவாம்.

உவமானம் என்னும் தமிழ்ச் சொல்லில் 'மானம்' என்பது அடைமானம் (அடைவு) படிமானம் (படிவு) என்பவற்றிற் போல் ஒரு விகுதி. உபமான என்னும் வடசொல்லில், மான என்பது அளவு என்று பொருள் படுத்தப் படுஞ் சொல்.

இங்ஙனம் வேறுபட்டிருப்பதால், தமிழ் 'உவமை' வேறு வடமொழி, 'உபமா' வேறு என்று கருதற்க. இரண்டும் ஒன்றே. வடமொழியில் உள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று காட்டுதற்கு, அதில் உள்ள தென் சொற்களெல்லாம் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாக வும் பொருள் கூறுவதும், அதுவும் இயலாக்கால் இடுகுறி (ரூடம்) என்று முத்திரையிட்டு விடுவதும், வடநூலார் வழக்கம். வெள்ளையான சிறு தவச வகை யொன்றைக் குறிக்கும் சாமை என்னும் சொல்லைச் 'சியாமா' என்று திரித்துக் கருப்பானது என்றும்; நன்றாய் எண்ணெயில் வெந்தபின் தின்னும் வடை வகை யொன்றைக் குறிக்கும் ஆமைவடை என்னும் சொல்லை ‘ஆமவட’ எனத்திரித்து 'நன்றாக வேகாதது' என்றும்; முகம் என்பதன் கடைப் போலியான முகன் என்னும் சொல்லை ‘மு. கன்' எனப்பிரித்து, தோண்டப் பெற்ற கிடங்கு போன்ற வாயையுடைய உறுப்பு என்றும், வடமுனையாய் தோன்றும் ஒருவகை நெருப்பைக் குறிக்கும் வடவை என்னும் சொல்லைப் ‘படபா' என்று திரித்து. அதனொடுமுகம் என்பதைச் சேர்த்துப் 'படபாமுகம்’ என ஆக்கி, “பெட்டைக்குதிரைமுகம் போன்றது என்றும் பொருள் கூறுவார் வேறு என்தான் சொல்லார்!

தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக்கண முறையிற் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம் ஏனையுவமம் என்னும் இருவகை யுவமை களையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமயியல், பிற்காலத்தில் வடநூலார் அணியிலக்கணம் வகுத்த போது தமிழிலக்கண